சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

என்னையறியாமல் எனக்குள் !!!
அன்றில் இருந்து 
என் மன புத்தகத்தில்
ஐம்புலன்கள் உதவியில் 
எண்ண பேனா கொண்டு
நான் கிறுக்கியவையெல்லாம்
இன்று என் குணங்களாக
எனக்குள் என்னோடு
போராட்டம் நடத்துகின்றன

நான் கிறுக்கியவை
என் பெற்றவர்கள்
சமூகத்தவர்கள்
என் சூழல்
எனக்குள் திணித்தவையை
சாடியே இருந்தது

அன்று நானறியாமல்
எனக்குள்
விதைத்ததை
இன்று அறிந்தும்
அறுவடை செய்யாமல்
தவிர்க்க முடியவில்லை

அன்று தெரியாமல்
திண்ற உப்புக்காக
இன்றும் தண்ணீர்
குடித்துகொண்டிருக்கிறேன்

மனம்
பழகி போனால்
குணம்

சிற்பி கையில்
இருக்கும் களிமண்
வடிவம் பெறுவது
அவனின் சிந்தனையை பொறுத்ததே

அக்கிரகாரத்து குழந்தை
மாமிசம் கண்டு குமட்டுகிறது
தாய்லாந்து குழந்தை
கரப்பான் பூச்சியை புசிக்கிறது

குழந்தையின்
மனம்
அவர்கள் வளரும்
சூழலை பொறுத்ததே!!!

வளரும் குழந்தைகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்போம்!!!

4 comments:

 1. /// குழந்தையின்
  மனம்
  அவர்கள் வளரும்
  சூழலை பொறுத்ததே!!! ///

  100% உண்மை...

  பொறுப்பு பெற்றோர்கள்...

  ReplyDelete
 2. பிள்ளையின் மனமோ பால் போலே
  சூழல் தந்திடும் செயலே விஷமாகும்
  சிந்தனைக்குரிய செயல்காட்டிச்
  சிறப்பாய்ச் சொன்னீர் பாட்டினிலே...

  அருமை... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

   Delete