நேற்று மாலை எனது நண்பன் ஒருவனை பல வருடங்களுக்கு பின் திடீரென வீதியில் எதிர் திசையில் சந்திக்க நேர்ந்தது. பல வருடமாகியதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்தது ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இனம்கண்டுகொண்டோம் அவனை பார்த்ததும் எனது மனது ஒரு பெயரை முணுமுணுத்தது அது வேறு ஒன்றும் இல்லை அவனுடைய பட்ட பெயர்தான் " உடுப்பு ic " , உடனே உதட்டில் ஒரு நக்கல் சிரிப்பு வந்து ஒட்டிகொண்டது அவனும் அருகில் வந்தான் பட்ட பெயர் கொண்டு அவனை அழைத்தேன் "நீ இன்னும் இதை மறக்கவில்லையா" என்றான்.எப்படி மறப்பது சொல்லுங்கள் இவன் செய்த வேலை மறக்க கூடியதா? சொல்லுங்கள்!!!!
சில வருடங்களுக்கு முன்.........
எனது நண்பனின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணின் திருமணம் அதுக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தது நாளை திருமணம் அதனால் பலகாரங்கள் செய்வதில், திருமண வேலைகளுக்காக அக்கம் பக்கத்த்தில் உள்ளவர்கள் எல்லோரும் பக்கத்து வீட்டில் இருந்தார்கள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்த நினைத்து நண்பனின் வீட்டில் நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு மாதிரியான படம் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்கள் ஆனால் அங்குதான் அவர்களுக்கு ஆப்பு காத்திருந்தது நண்பனின் பாட்டிக்கு கண் பார்வை மிகவும் குறைவு ஏன் இல்லை என்றே சொல்லலாம் அப்படி இருந்த பாட்டிக்கு அன்று எப்படி கண் தெரிந்ததோ நண்பர்களை பார்த்து கேட்டிருக்கிறார் இதென்ன தொலைகாட்சி பெட்டியில் இருப்பவர்களுக்கு உடுப்பு ஒன்றும் இல்லை என்று, அறிவு பூர்வமான எனது நண்பன் பாட்டிக்கு சொல்லி இருக்கிறான் பாட்டி TV ல உடுப்பு IC அடிபட்டு போச்சு அதுதான் அப்படி தெரிகிறது என்று அது மட்டும் இல்லாமல் பாட்டிக்கு விளக்கம் சொல்லி இருக்கிறான் Sound IC பழுதடைந்தால் சத்தம் வாராதது போல , கலர் IC பழுதடைந்தால் கலர் இல்லாமல் போவது போல , உடுப்பு IC பழுதடைந்தால் உடுப்பு வராது என்று. பாட்டியை சமாளித்தது வீர தீர பராகிரம செயலாக நினைத்துகொண்டிருக்கையில் ...
மறுநாள் திருமணம் முடிந்து. அப்போதெல்லாம் யாழ்பாணத்தில் திருமண வீட்டில் இரவில் திரை படம் போடுவது வழமை அதுக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது அதற்கு நண்பனின் தொலைக்காட்சி பெட்டிதான் கொண்டு சென்றனர் இப்போது திருமண வீட்டில் தனது வீட்டு தொலைக்காட்சி பெட்டி இருப்பதை தெரிந்துகொண்ட பாட்டி முன்னு வந்து பலர் முன்னிலையில் தொலைக்காட்சி பெட்டிக்கு குறுக்காக நின்று கொண்டு இந்த தொலைக்காட்சி பெட்டிக்கு உடுப்பு IC வேலை செய்யவில்லை நேற்றுத்தான் தம்பியும் நண்பர்களும் பார்க்கும் போது உடுப்பில்லாமல் எல்லோரும் வந்தார்கள் தம்பி எங்கே இருகிறாய் இவர்களுக்கு சொல்லு என்றார் என் நண்பனை பார்த்து....
அப்போது எனது நண்பனின் முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலை இன்றுவரை எனக்கு இருக்கத்தான் செய்கிறது......
நண்பனின் மானம் பலர் மத்தியில் போனது மட்டுமில்லாமல், அன்றில் இருந்து நண்பனுக்கு உடுப்பு IC என்ற பெயர் வழக்கில் வந்துவிட்டது...
இத்தனை வருடம் கழித்து நண்பனை காணும் போதும் எனக்கு இந்த பெயர்தான் முதலில் வந்து விழுகிறது..
பார்த்தீர்களா? பாட்டிக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு தானே அவரை ஏமாற்றலாம் என்று எண்ணியதன் முடிவு ...........
எங்கள் தப்புகளை அடுத்தவர்களின் அறியாமையின் அதிக நாட்கள் மூடி மறைக்க முடியாது அந்த அறியாமையே அதை வெளிகொண்டுவந்துவிடும்.
இன்று எல்லா துறைகளும், அரசியல், ஆன்மீகம் , வியாபாரம் எல்லாமே பாமரர்களை ஏமாற்றுவதாகவே உள்ளது...........
இவை என்று மாறுமோ?
மீள் பதிவு...
ஹா ஹா நல்ல கதை தான்
ReplyDeleteHe...he...
Deleteகதையல்ல நிஜம்... :)
Deleteபழைய சம்பவங்களை நினைவூட்டிப் பார்ப்பதே அழகுதான்...ஆனால்.......... அந்தத் தலைப்புதான் கொஞ்சம்.............. ... ... ...
ReplyDeleteதலைப்பு கொஞ்சம் ............ இருந்தாலும் அது சம்பந்தமான கதை என்பதால் .. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
Delete