சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

இமை மூடி எனை மறந்து...!!!



பூமியவள் பொன் தோய்க்க 

ஒளி கொடுத்து உரமிழந்த 
உதயனவன் ஓய்வெடுக்க 
ஆழியிடை அரண் திரும்ப 
வானவில் வண்ண கோலமிட 
முகிலுறவு மகிழ்ச்சிகொண்டு 
அரவணைத்து உரசிடவே
வாத்தியமாய் இடிமுழங்கிட
திளைத்திருந்த சோகமது
தடமின்றி தணிந்திடவே
இதமான இயற்கைதனை
தித்திக்க ரசித்து நின்றேன்
மேலெழுந்த அலைநடுவே
புகுந்துவந்த தென்றலது
தாங்கி வந்த அலைத்துளியை
இதமாக தெளித்திடவே
இமை மூடி எனை மறந்து
இதயமது உணர்ந்திடவே
தென்றலோடு தழுவிநின்றேன்
இயற்கையது இருக்கும்வரை
இன்புறவே ரசித்திடுவோம்
துன்பமெலாம் போக்கிடுவோம் ...!!!


புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

2 comments:

  1. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.. உங்களை நான் பல வலைச்சரத்தில் பார்த்திருக்கிறேன் உங்களை போல எல்லா பதிவுகளையும் தேடி படிப்பவர்கள் இருப்பது அரிதாகவே இருக்குமென நினைக்கிறேன்..

    நன்றி..

    ReplyDelete