சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!தாயகம் மீட்டிட உரிமையை காத்திட 

பெரும் கடமை கொண்டவர் 
சுயநல செல்வாக்கு வசதியால் 
தன்னுயிர் காத்திட புலம் விட்டு ஓடினர்
இவர்கள் அன்றைய துரோகிகளாகினர் 
தொடங்கிய யுத்தத்தை முடித்திட எண்ணி 
பூக்களும் ஆயுதம் ஏந்தின
ஈழகவிஞரோ ஓடியவர் தனை
கோழைளென வசை பாடியே
எஞ்சியவர் மூளையை சலவை செய்தனர்
இறுதியில் அரும்புகள் கைகளிலும்
உயிர்கொல்லி ஆயுதம் திணிந்தது
பணங்களை அள்ளி வீசியே
பாரினிலே இருந்தவர் யுத்தம் வளர்த்தனர்
யுத்தத் தீயினை காரணம் சொல்லியே
குடியுரிமை பெற்று குளிர் காய்ந்தனர் பலர்
பொருளாதார அரசியல் மலிந்த உலகினில்
பல நாடுகள் துணையுடன் ஈழத்தை அழித்திட
போர் என்ற பெயரில் பெரும் சூழ்ச்சி நடந்தது
ஆணிவேரற ஈழ மரமும் சாய்ந்தது அதில்
விதைகள் விழுதுகளென எண்ணி
அரும்புகள் முதல் சருகுகள் வரை
ஆயிரமாயிரம் சனம் துடிதுடித்தழித்தனர்
எஞ்சிய குற்றுயிர் உறவுகளில்
அங்கங்கள் இழந்தவரில் ஆயிரம் பிஞ்சுகள்
இப்படியானது ஈழவரலாறு, இருந்தும்
இன்னொரு போர் மூண்டிடாதா என
ஓநாய்கள் அழுகிறது எஞ்சிய மக்களையும்
கொண்றிட சந்தர்ப்பவாதிகள் சூழ்சிகள் தொடருது
நாடு கடந்து நின்றே வீரம் பேசி நிக்குது
காசு கொடுத்தது வீரம் என பேசி நிக்குது
இவர்கள் இன்றைய வீரர்கள்
மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள்
வாழ்க்கை வீதியில் நிக்குது
எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என
எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே
பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில்
இவர்களை ஒதுக்கியே வைக்குது
அன்றைய போராளிகள்
இன்றைய துரோகிகள் என்கிறது
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா.....!!!

8 comments:

 1. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம்
  காண:http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_16.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அறிமுக பதிவுக்கு எனது நன்றிகள்.......

   Delete
 2. Replies
  1. உங்கள் வருகைக்கும். கருத்துக்கும் உணர்வுக்கும் நன்றி தோழரே..

   Delete
 3. எனக்கென்றுஞ தயாரிக்கபட்டதாகவே இருககின்றது கவிதை .இந்த கவிதையின் நிலை தான் எனது. கரன் நீர் கற்பனையில் எழுதீனீரா என்று தெரியவில்லை ஆனால் உண்மை நிகழ்வு இது நான் நாளாந்தம் குமுறிக்கொண்டிருக்கும் விலி இது. நன்றி கரன்

  ReplyDelete
  Replies
  1. கற்பனை இல்லை இது அதே நேரம் எனது அனுபவமும் அல்ல முகபுத்தக காகித புலிகளின் அட்டைக்கத்தி வீரம் பார்த்து பார்த்து பல குழுக்களின் பதிவுகள் வாசித்து சந்தித்த மனிதர்களின் மனநிலை அறிந்து எழுதியது..

   Delete
 4. உண்மைநிலை என்று அனுபவித்தவர்கள் கூறிவிட்டார்கள் , நான் வேறு என்ன சொல்ல ..அருமையான கவிதை ..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete