காமமதில் கலங்கமில்லை
காயமிதன் தேவையதில்
காமனவன் லீலையினால்
கற்பிழந்த கடவுள் பலர்!!!
காமமின்றி பூமியேது
கற்பிக்கத்தான் யாருமில்லை
கண்டபடி கற்றுவிட்டோம்
கண்டதெல்லாம் காமமென்று!!!
மெய்யிரண்டின் தேவைதனை
ஒன்றைஒன்று அறிந்திடனும்
கொடுத்து பெற புரிந்திடனும்
அருவருப்பு பார்த்து நின்றால்
திருப்தியது கிடைப்பதில்லை
கிளியிருக்க குரங்கு தேடும்
காரணமும் இதுவதுவோ
முகம்சுழிக்கா முறை இதைதான்
முந்தானை முடிச்சென்றார்!!!
இன்பமது நிலைத்திருக்க
இடையிடையே இருவருமே
தாழ்வுமனம் தற்பெருமை
அடியோடு அழிந்திடவே
இதைப்பற்றி பேசிடனும்
குறையில்லா வாழ்வுபெற
குறைகளிதை மாற்றிடனும்!!!
வெளிப்படையாய் பேசினால்
ஆயிரம் குறைசொல்லும்
கடைசிவரை ஒளித்தே வைக்கும்
முகமூடி சமூகமிது
கூறிடவே கூச்சபட்டு
வாழ்வழித்த தமிழர் பலர்
இது போல இனி வேண்டாம்
அராய்ந்து பார்த்திடுவோம்
அனைத்தையுமே பேசிடுவோம்
அன்போடு இன்பமென
உனக்கென உள்ளவரோடு
உன்னதமாய் வாழ்ந்திடவே
உரிமையாய் பேசிடுவோம்
உண்மையாய் வாழ்ந்திடுவோம்!!!
This comment has been removed by the author.
ReplyDelete