சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

ராவணன் மகள் சீதைதன் நாட்டு பெண்ணெல்லாம் 

தனக்கு தாரமென்றால் 
தசரதன் மகன் ராமனுக்கு 
அந்நாட்டில் இருப்பதெல்லாம் 
அன்னையும் அக்கா தங்கைகளும்
தந்தை தசரதன் சபலத்தால் 
தனையன் இவன் ரசிக்க தையலில்லை
ராவணன் மகள் தவிர்ந்த பெண்ணெல்லாம்
தங்கைகளாக இருக்குமோ என்ற பயத்தால்
ஏகபத்தினி விரதனாகவிருக்க வியப்பென்ன

மகளுடன் சேர்ந்திருந்தால்
அரியணை அழிந்திடுமென
அரண்மனை சொதிடர் சொல் பயந்து
ராவணன் மகள் சீதை தனை
பேழையில் போட்டு விட்டு விட்டான்
ஜனகள் அதை கண்டெடுத்து வளர்த்து வந்தான்


சூழ்சியில் ராமனும் காடு செல்ல
கூடவே சென்ற சீதையும் துன்புற
ஓடி சென்று ராவணனும் தன் மகளை
இலங்காபுரி அழைத்து வந்தான்
கோபம் கொண்ட ராமனோ
சூழ்சிகள் பல செய்து
மாவீரன் ராவணன் தம்பி உதவிகொண்டு
சிவதாசன் உயிர் பறித்துவிட்டான்..!!!தசரதனுக்கு 63000 மனைவிகளாம் என்ன கொடுமை சார் இது ???
சிவதாசன் -ராவணன்
என்னடா இவன் ராவணன் மகள் சீதை என்கிறான் என்று வியப்பா??

( ராமாயணங்களில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட ராமாயணம் ஒன்றுள்ளது. இது இன்ன பெயர், இன்னாரால் எழுதப்பட்டது என்பன குறிப்பு இல்லாமல் செவிவழிக்கதையாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த ராமாயணத்தின் கதை எப்படி எனில், ராவணனின் மகள் சீதை. சீதை பிறந்த நேரத்தைக் கணித்த ஜோதிடர்கள், சீதையால் லங்கைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால், சிசுவைக் கொன்றுவிடும் படியும் யோசனைக்கூறினர். குழந்தைப் பாசத்தால் கொல்ல மனமில்லாத ராவணன், அந்தசிசுவான சீதையை ஒரு பெட்டியில் வைத்து, தன் நாட்டு எல்லைக்கு அப்பால் விட்டுவரச் செய்தான். அதனை ஜனக மன்னன் கண்டெடுத்து வளர்த்து வந்தான். பின்னர் ராமனை மணம் செய்தப்பிறகு, சீதைக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது. இவை அனைத்தையும் தன் ஒற்றர்கள் மூலம் அவ்வப்போது அறிந்து வந்த ராவணன், தன் மகள் சீதை காட்டில் படும் இன்னல்களைக்கேள்விப்பட்டு வேதைனயடைந்தான். அவளை நல்லமுறையில் வாழவைக்க தன் நகருக்குக் கடத்திவந்தான். தானே அவளது தந்தை என்று ராவணன் கூறியதை சீதை நம்ப மறுத்ததால் போர் ஏற்பட்டது. முடிவில், சீதையின் கால்பட்டதால் லங்கா அழிந்தது. ராவணனும் உயிர் இழந்தான் என்று கதை போக்கு போகிறது...)

8 comments:

 1. R.S.மனோகரின் லங்கேஷ்வரன் நாடகத்தில் இப்படி அமைந்துள்ளதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 2. R.S.மனோகரின் லங்கேஷ்வரன் நாடகத்தில் இப்படி அமைந்துள்ளதாக கேள்விப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே,.....

   Delete
 3. Replies
  1. யாருக்குத்தெரியும் இதுதான் உண்மையான ராமயனமாகக்கூட இருக்கலாம்.......

   Delete
 4. கதை எப்படி வேண்டமானாலும் இருக்கலாம்... கற்றுக் கொள்ள வேண்டிய கருத்துக்கள் நிறைய இருக்கின்றன...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்... கதைகளை கதைகளாக கருத்துக்கு மட்டும் பார்த்தால் போதும் இல்லை அதன் பெயரில் மூட நம்பிக்கைகள் தலை விரித்தாடும்..

   Delete
 5. எல்லாவற்றிலும் தீயவற்றை விளக்கி பொய்களை அழித்து பயனுள்ளவற்றை கற்றுகொள்வோம்.. நன்றி உங்கள் கருத்துகளுக்கு... :)

  ReplyDelete