சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
பகலவன் மீது வீழ்ந்த கறையது
பேழையில் தவழ்ந்தது கர்ணன் உயிர்
பாதகி தவறதற்கு பகலவன் பழி சுமந்தான்
சூரிய ஒளிதனில் விந்துகள் கலந்துவந்து
குந்தியை கலவி செய்து வந்தவன் கர்ணன் என்று
இதிகாசம் சொல்கிறது அறிவியல் வேந்தர்களே
குளோனிங்கை சொன்னவரே குருத்தணு பார்த்தவரே
பகலவன் பழிதீர கர்ணனின் மரபணு அறிவீரோ
பகலோன் ஒளிதனில் உயிரணுக்கள் இருபதற்கு
சாத்தியங்கள் உள்ளனவோ அராய்ந்து சொல்லுவீரோ
மதமென தலையசைத்து சொல்வதெல்லாம் சரியென
மூடரென வாழ்ந்திருக்க "எப்பொருள் யார் யார் வாய் "
உலக பொதுமறை திருக்குறளும் போய்த்திடாதோ !!!
(குருத்தணு-Stem cell)
-புலோலியூர் கரன்-
http://www.facebook.com/sabaharans
வித்தியாசமான சிந்தனை வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்கள் தொடர் வருகையும் முதல் வருகையும் இனிய கருத்தும் மனதை நெகிழ வைக்கிறது நன்றி நண்பரே,,,
Deleteஇப்படி ஒரு கோணத்தில் சிந்தித்து கவிதை எழுதியமைக்கு பாராட்டுகள்.கவிதையும் நன்றாகவே இருக்கின்றது
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி உங்கள் கருத்துக்கு நன்றி...
Delete