சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

நதிகளுக்கு இவள் கடலோ!தங்க வாழை தண்டெடுத்து 

பிரம்மன் வடித்த மெய்யோ!
பூக்களெல்லாம் நாணமுற 
தரணி வந்த செம்மலரோ!
இழை உருக்கு ஒளிதெறிக்க 
உடையணிந்து உற்றவரை 
உருக்குலைக்க உதித்தவளோ!
மனிதரெலாம் செழிப்புற
பாரெங்கும் ஓடிவந்து சங்கமிக்க
நதிகளுக்கு இவள் கடலோ!
மரங்களெல்லாம் பசுமைகொள்ள
இவள் இளமைதான் இன்ப வூற்றோ!
காளையர் மனதில் பருவமெழுதிட
கற்பனையில் வடித்து வைக்கும்
பதின்ம கனவுக் காதலியோ!
பாமரன் நானும் கவி எழுதிட
என் கண்கவர வந்த கவிக்கருவோ!!!

-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

2 comments:

 1. கம்பநாடன் கண்ட மிதிலையின் இளவரசியும்...
  கவிகாளிதாசன் கண்ட சகுந்தலையும்
  உங்களின் பாடுபொருளாக பார்க்கிறேன்...
  அருமை அருமை...

  உங்களின் தளத்துக்கு இதுவே என் முதல் வருகை...
  அருமையான பதிவுகள்.
  தொடருங்கள் வாழ்த்துக்கள்...

  நேரமிருப்பின் என் வலைப்பக்கம் வந்து பாருங்கள்..
  நன்றிகள்..

  http://www.ilavenirkaalam.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்.
   உங்கள் வருகைக்கும் மனதை மகிழ்வித்த கருத்துக்கும் நன்றி,

   Delete