பணம் படைத்த பகவான்களுக்காக
பட்டணத்திற்கு பாரிரங்கிவந்த
இந்திரலோக சுந்தர விடுதிகளில்
கலியுக கிருஷ்ண காமலீலைகள்
கற்புக்கு பணம் என கணக்கு போடும்
போதைக்காக பாதை மாறும்
இலகணமில்லா இல்லறமிது
இவர்கள் சொல்வதே வேதம்
இதுதான் இன்றைய மார்க்கம்
நாளைய பெரியமனிதர்கள்
உருவாகும் உன்னத பூமியிது
பட்டாடை தினமும் பலவுடுத்தி
பல கோடி நவரத்தின நகை போட்டு
பாரினை காத்திடும் கரும் கற்களுக்கு
நாளும் நடத்திடும் அபிஷேகத்தில்
வெளிசிந்தும் கழிவை கரம் சேர்த்து
காத்திருந்து பருமும் ஏழையை போல
பகட்டு இரவு விடுதி மன்மதர்களின்
மிஞ்சிய நாகரிக எச்சங்களுக்காக
இன்னொரு பூலோக நரக உலகம்
குப்பை தொட்டியருகே காத்திருக்கிறது
உண்ணும் போது கரம் உயர்த்தி
காக்கையை விரட்டிட வீசிய கையில்
விட்டகன்ற சோத்து பருக்கைகளை
கண்ட காக்கை ஒன்று கரைத்து கூவி
சேர்ந்து கூடி கூட்டமாய் உண்டது
ஆறறிவு உள்ள ஆணவ மனிதனிடம்
இல்லாத சிற் அறிவை காக்கையிடம்
மனிதம் பேசும் நாம் கறக்கவேண்டும்...!!!
அந்த ஒற்றுமை இன்றைய சுயநல மனிதனிடம் இருக்க வாய்ப்பே இல்லை...
ReplyDeleteநாகரீகத்தில் தொழில் நுட்பத்தில் நாங்கள் வளந்துகொண்டே போகிறோம் அடுத்த கிரகத்தில் நிலம் வாங்குகிறோம் விளம்பரத்துக்காக ஆனால் முகத்துக்கு முனால் பசியில் துடிப்பவர்களை கண்டால் முகத்தை திருப்பி செல்கிறோம் மதுபான கடையில் நண்பர்களை அழைத்து சென்று ஊத்தி ஊத்தி கொடுப்போம், வீட்டருகில் கால்வலிக்க வண்டி தள்ளி வந்து கீரை விற்பவனிடம் ஒரு ரூபாவிற்கு பொருளாதாரம் அரசியல் எல்லாம் பேசுவோம்..இதுதான் இன்றைய மனிதம்.......
Deleteகாக்கையிடம் கற்க வேண்டிய பாடத்தை நாம் சிறுவயதிலேயே கற்றிருந்தாலும் அதை நடை முறைப்படுத்தும் மனிதர்கள் எத்தனை பேர் ?
ReplyDeleteஉணர்ந்து பெற்றவர்களையாவது தவிக்க விடாமல் இருந்தால் சரி.
நல்ல வரிகள் நன்றிங்க.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Deleteநாங்கள் சிறு வயதில் கற்றதெல்லாம் புள்ளிகளை பரீட்சைக்கு எடுப்பதற்காகவே அன்றி மனிதத்தை வாழ்கையை சீர் படுத்த அல்லவே...
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
ஆலயம் தொழுவது வேலை மினைக்கேடு
இது புதுக்குறள்.