சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

திருப்பதியும்....தெருப்படியும்....



சர்வ சக்தி படைத்த அவருக்கேன் ஏராளமான பொருள் செலவு செய்து நாம் இதையெல்லாம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்?


கடவுள் இருக்கட்டும்- நாங்கள் வேண்டாமென்று கூறவில்லை!

எங்கும் வியாபித்திருக்கும் அந்தக் கடவுளுக்கேன் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்?

அவருக்கேன் 10-ஏக்கர், 20-ஏக்கர், விஸ்தீரணத்திற்கு மாடமாளிகையும் கூட கோபுரங்களும்?

அவருக்கேன் ஒரு கோடி, இரண்டு கோடி மதிப்பு பெறும்படியான நகைகள்?

அவருக்கேன் பல லட்சரூபாய் பெறுமான தங்கக் கிரீடம்- வைரக் குல்லாய்கள்?

அவருக்கேன் நித்தியம் ஆறுவேளை பூஜை?

பாடுபட்டும் பல பாட்டாளி மக்கள் பசியுடன் இருக்க, அவருக்கேன் 10-படி, 20-படி சோற்றுருண்டைகள்?

அவருக்கேன் பாலாபிஷேகம் - தேனாபிஷேகம்?

அவருக்கேன் வருடந்தோறும் கல்யாணம்?

அவருக்கேன் தேவடியாள்கள்?

அவருக்கேன் தேரும் - திருவிழாவும்?

இவையனைத்தும் எதற்காக கடவுளுக்கு?
கடவுள் கேட்டாரா? இல்லை கடவுளின் பெயரில் கேட்கிறார்களா?

எடுப்பவன் கடவுளா? கொடுப்பவன் கடவுளா?
கடவுளை நம்புங்கள் மூடநம்பிகையை அல்ல கடவுளின் பெயரில் நடக்கும் வியாபாரத்தை பக்தி என்று நம்பி ஏமாறாதீர்கள்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்...

நன்றி- சிந்திக்க உண்மைகள்


புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

4 comments:

  1. நல்ல சிந்தனை கருத்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும். கருத்துக்கும் நன்றி..

      Delete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
    Replies
    1. நண்பரே மிகவும் நன்றி மாற்றி விட்டேன்..

      Delete