சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

தாயா இவள் பேய்...!!!


கூர்ப்படைந்த குரங்கிவள்

மரபணுவில் மனிதனிவள் 
மனிதத்தில் அரக்கியிவள் 
உடையணிந்த ஊர்வசி 
உள்ளத்தில் ராட்சசி 
குரங்கிடம் கற்கவேண்டும் 
தாயென்றால் யாரென்று
தாய்மையில் பெண் பேரழகு
தாயிவளோ பெண்மைக்கு பேரிழுக்கு
அம்மா ஆறறிவு இருந்தென்ன
குற்றுயிராய் குழந்தை தொங்க
உன்போல கொடூர தாய்க்கு
மனிதனாய் பிறப்பதைவிட
இக்குரங்கிற்கு குட்டியாய்
பிறந்திருந்தால் பூலோகத்தில்
பேரின்பம் அடைந்திருப்பான்!!!

-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

8 comments:

  1. குரங்கினிலும் கீழான
    கொடூர மனதினளின்
    விலங்கினச் செயல் கண்டு
    வேதனை பகர்ந்தீர்
    விளங்குமோ இதுகளுக்கு
    தாய்மைமொழி என்னவென
    வேதைதரும் கவிதை
    விளக்குகிறது உணர்வினை...

    அரிய உணர்வுப்படைப்பு...
    விறைத்ததென் தாய்மை...:(.

    ReplyDelete
    Replies
    1. அருமை கவிதைக்கு கவியில் கருத்துள்ள பதில்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.......

      Delete

  2. இதுபோன்ற அம்மாக்களும் இருக்கிறார்கள் உலகில்...

    ReplyDelete
    Replies
    1. வளர்கிறது உலகம்
      மனிதம்???

      Delete
  3. உலகில் இப்படியான அம்மாக்கள் அதிகரித்துக் கொண்டுவருகிறார்கள். குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற தாய்மைக்குப் பெயர் போன நாடுகளிலும் இது அதிகரிக்கிறது.
    மனிதம் தன் தன்மையை இழந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. மனோதத்துவம் கூட பார்த்து வியக்கிறது தாய்மையை வெளி நாடுகளில் புகை பழக்கத்தில் இருந்து விடுபடாமல் இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் அதை தவிர்த்து தாய்மையை வியக்க வைக்கிறார்கள் மனோ தத்துவ நிபுணர்களே இதை பார்த்து வியக்கிறார்கள் இப்படி ஒரு உறுதி எப்படி இந்நேரத்தில் பெண்களுக்கு வருகிறதென்பதை..

      Delete
  4. இவர்களுக்கெல்லாம் குழந்தை தேவையா...?

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் கள்ளி பாலை கொடுத்து பெண் சிசுவை கொல்வார்கள் அப்போது தாய் படும் பாட்டை நினைத்து பாருங்கள்????? தாயின் விருப்பமின்றி தான் இங்கு இது நிறைவேறுகிறது .....

      Delete