சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

கடவுளை காப்பாற்ற ...!!!
பணத்தை பறிகொடுத்த வழிப்போக்கன்
 
நள்ளிரவில் கோவிலுக்கு செற்றான்
கடவுளிடம் முறையிட .......!!!

கோவில் பூட்டபட்டிருந்தது
கடவுள் சிலைகளையும்
அவர் நகைகளையும் காப்பாற்ற..!!!

2 comments:

 1. அருமை...

  நிலைமை அப்படி... அவருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது...!

  ReplyDelete
  Replies
  1. பாவம் பாமரர்கள் இருக்கும்,உழைக்கும் கொஞ்ச பணத்தையும் தமக்கு விடிவுகாலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோவில்களில் காணிக்கை, வேண்டுதல் என வீணடிப்பதை பார்க்கும் போது மனது போருக்க வில்லை ........

   Delete