சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
நடமாடும் தெய்வத்தை நடு வீதியில் உதறிவிட்டு கல்லாய் போன உன் நெஞ்சு ஆயிரம் கல்லுக்கு அபிசேகம் தினமும் செய்வது எதுக்காககோவில் பலவேறி வரமென வலி தாங்கி உனை பெற்று
பூமியிலேயே சொர்கத்தை
வரமாக கொடுத்த அன்னைக்கு
நன்றிகடனாக நீ கொடுத்தது
முதியோர் இல்லம் என்கிற நரகத்தை
பூமியும் மனிதரை அழிக்க முயல்கிறது
உன் போன்ற மனிதர்கள் இருப்பதனாலோ....!!!
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans
இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் குழந்தைகள் ஒரு கேடா...? ஆனால் விரைவில் இதை விட மோசமாக அனுபவிப்பார்கள் - எந்த விதத்திலாவது...
ReplyDeleteஎப்போது தன் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டு தன் பிள்ளையின் மனதில் எப்படி பெரியோரை பேணுதல் என்ற விதையை விதைத்து விட்டார்கள் அவர் பிள்ளை நாளை இதை உணர்த்தும்........
ReplyDeleteபெற்றவர்களை சுமையென நினைக்கும் நிலைகெட்ட மனிதற்கு சுள்ளென உரைக்கும்படியான கவிதை அற்புதம் .
ReplyDeleteஉருக்குலைந்த மனித மிருகங்கள் மீதான உங்கள் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.. கருத்துக்கு நன்றி,
Delete