சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

ரஜினி நல்ல நடிகனா? தலைவனா?தாய் மண்ணில் கோடிகளில் 

தொழிற்சாலைகள் 
உன் மகளுக்கு கோடிகளில் 
சீதனம் 
வங்கியில் மில்லியன் கோடிகள் 
பணமாக 
இத்தனை இருந்தும் இறப்பர் செருப்பில்
இந்தியர் மனதில் இடம் பிடிக்கும்
சூட்சுமம் எப்படி அறிந்தாய்
நிஜமாகவே நீ நடிகன்டா

இருப்பதை வாரி வழங்கிவிட்டு
இல்லாமல் இருப்பதை போல
இங்கு பெருமை பேசிக்கொள்ள
இதுபோன்ற புத்தகங்கள் இருக்கும்வரை
உன்னை தலைவன் என போற்றும்
உருப்படாத ரசிகர்கள் இருக்கும்வரை
நீதான் அடுத்த முதலமைச்சர்
கல்விக்கண் திறந்த காமராஜர் கூட |
உன் கருணைக்கு பின்தான்

அவர் உழைக்கிறாய்
கொடுப்பது கொடுக்காதது
அவர் விருப்பம் என்று
யாரோ என்னை ஏசும்
சத்தம் கேட்கிறது

இதுபோன்ற மக்களை வைத்து
போற்றி புகழ்ந்து அசாதாரணமாக
உழைப்பவன் கொடுக்க கூடாதென்றால்
திருடுபவன்தான் கொடுக்கனும்

ஐயாயிரம் சம்பளம்
பெறுபவன் கூட
ஐநூறு கொடுக்கிறான்
கோடிகளில் வாங்குபவன்
உயிரிலும் மேலான ரசிகர்கள்
என்று அடைமொழி சொல்பவன்
கொடுக்கும் விகிதம்தான் என்ன?

நடிகனை நடிகன் என்றால்
யாருக்கும் பிரச்சனை இல்லை
தலைவன் என்கிறீர்களே
அதனால் நாளை இதுபோன்ற
சுயநலவாதிகள் நாடாழ
ஆசை கொள்ளலாம் அதனால்
தோலுரிக்க வேண்டியுள்ளது
இந்த சுயநலவாதிகளை

உணவுக்கு வழியில்லாத
எத்தனையோ பேர்
உன்னை பார்த்து
புகைக்க பழகினர்
உன் உருவத்துக்கு ஏறி
பாலூத்தினர்
உனக்காக வேண்டி
மண் சோறு உண்டனர்
ஆயிரம் ஆன்மிகம் பேசும்
உனக்கு இதை தடுக்க ஏன்
வார்த்தை வரவில்லை
இவை தவறென்று உரைக்க
முடியவில்லை
இவர்கள் அன்பை பார்த்து
வியக்கிறேன் என்று
நாடகமாடினாய்
திரையில் மட்டுமல்ல
அதை விஞ்சிய நடிகன் நீ
நிஜத்தில்!!!!

10 comments:

 1. நல்ல நடிகர் என்பதில் சந்தேகமேயில்லை...

  ReplyDelete
  Replies
  1. உண்மைகள் பலருக்கு உடனே புரிவதில்லை.. நடிகனை நடிகனாக பார்க்க பழகவேண்டும்..

   Delete
 2. poda dupukku. thalaivar rajini vazga.

  ReplyDelete
  Replies
  1. அருமை .. :)
   உங்கள் வாழ்த்து உங்களுக்கே பொருந்தும்..

   Delete
 3. muddapayal rajini thamiralai eamaddriyavan

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு புரியுது ...

   Delete
 4. ellam antha idathula irunthu paththathaan therium
  nallathu seiyaavittalum keduthal seiyama irukkanumnu nenakkira manithar. konjam pugal kedaichalum thondana pottu oru vali panra manithargal vaalum intha naatilthaan avarum irukkaar. ungalukku perum pugalum kedaichcha therium.........

  ReplyDelete
  Replies
  1. அவர் அப்பிடியே இருக்கட்டும் நடிகனாக தலைவனாக வேண்டாம் என்பதே எனது கருத்து .. புகழ் போதை , பண போதை .. இருந்துவிட்டும் போகட்டும் தலைவனாக வேண்டாம் இவர்கள் போல சுய நலவாதிகள்

   Delete