சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

நிலா முகத்தில் இரு பிறைநிலா பேரழகு



தங்கங்கள் தான் மின்னுமே 

ஏனோ பெண்ணே உன் 
அங்கங்கள் மேலிருப்பதால் 
மங்கித்தான் போகின்றன 

உன்மேல் வானவில்லுக்கு 
என்ன இத்தனை உரிமை
சேலையாகி மானம் காக்கிறதே
மானம் காப்பதாக சொல்லி
உன் சோலை தழுவியே
என் கோவம் தூண்டுதே

பூக்கள் பூத்து குலுங்கும்
அழகிய நந்தவனத்தில்
உன்னையன்றி எதையும்
பார்க்க தோன்றவில்லையே

உன் நளினம் கண்டு மயங்கி
மயிலும் நடனம் கற்க வந்ததோ
உன்னசைவு கொண்டு அன்னமும்
நடை பயின்று சென்றதோ

வண்ணத்து பூச்சியொன்று
தேன் குடிக்க வாடி நிக்குதே
உன் பாதத்தை புது மலரென
மதி மயங்கியே

பூமிக்கு பிறைநிலா அழகு
உன் நிலா முகத்தில்
இரு பிறைநிலா இமைகள்
பேரழகு...!!!

-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

6 comments:

  1. Replies
    1. நன்றி நண்பரே.. உங்கள் ரசிப்பு என் ஊட்டம்...

      Delete
  2. ரசிக்க வைக்கும் வரிகள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனையான கருத்து மிக்க மகிழ்ச்சி..

      Delete
  3. படமும் கவியும் வரிகளும் அருமை ரசித்தேன். வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.......

      Delete