சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

கருப்பை சிறையில் பத்து மாசம்...!


என் உயிர் வருத்தி 

உன் உயிர் கொடுக்க 
கருவறையில் சில மாசம் 
உன்னை நான் சுமந்தேன் 

என்னை உயிரோடு பிணமாக்கி 
எதற்கிந்த கல்லறை இல்லத்தில்
அனாதையாய் விட்டு சென்றாய்

உன்னை
பத்து மாதம் என் கருப்பையில்
சிறை வைத்ததாக நினைத்து
எனக்கு
இங்கு தினமும் மரண தண்டனையா...!!!

8 comments:

  1. முனகுமிடம் முதியோர்
    இல்லமா ?

    ReplyDelete
  2. அனுப்பியவர் விரைவில் இங்கே வருவார்... வர வேண்டும்...

    ReplyDelete
  3. இன்று அநேகமான தாய்மாரின் கதி(தை) இதுதான்.
    பத்துமாத கருப்பைச் சிறைக்குப் பதில் ஆயுள் தண்டனையா?

    வித்தியாசமான சிந்தனை. கவிதையை ரசித்தேன் சகோ...

    ReplyDelete
  4. arumaiyaa na uvamai oppeedu vaazhththukkal

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

      Delete