ஈர காற்று மெல்ல வீசி வந்து
அவள் இதழோடு உரசி செல்ல
காற்று பட்டு மூடித் திறந்த கண்கள்
என்னை அருகில் சொக்கி இழுக்க
பொறாமை கொண்ட மணல்கள்
கண்ணில் புகுந்து கலகம் செய்ய
புத்தி கொண்ட சில மணல்கள்
அவள் அங்கம் ஒட்டி கொள்ள
அதை தட்டிவிடும் சாக்கில்
என்கைகள் அவளை தொட்டுவிட
வெட்கி தலை கவிழ்ந்து அவளும்
மெல்ல என் மடியில் ஒட்டிக்கொள்ள
கைகளை மெல்ல மாலைகளாக்கி
தன்னோடு இறுக்கிக்கொள்ள
போக வழியன்றி வீசி வந்த தென்றலும்
வெட்கி சென்று கடலிடம் முறையிட
நியாயம் கேட்க வந்த அலையும்
நம்மை பிரிக்க மனமின்றி
பலமுறை திரும்பி செல்ல
ஒன்றாய் கண்கள் மூடி கிடந்தோம்
படகின் இனிய நிழலிலே
பாரினை மறந்து மகிழ்ந்தோம்...!
-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans
மெரீனாவில் அங்கங்கே "எல்லாமே" மறந்த நிலையில் இப்படித்தான் இருக்கிறது...
ReplyDeleteஎல்லாம் வயசுதான் காரணமோ?
ReplyDeleteவயதுக்கும் காதலுக்கும் காமத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறேன்... :)
Delete