சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

மெல்லிடையோ இது கள்ளிடையோ!



உன்னில் நனைகிறது என் விழிகள் 

காந்தபார்வையில் இரும்பாகியே!

மதிவதனி உன் வதனம்கண்டு 
மறந்ததென் மதியும் முகமும்!

கன்னங்கள் சிந்தும் போதையில்
மதுக்கிண்ணங்கள் தோற்றதே!

குவியும் உன் செவ்வுதட்டில்
சிதறித்தான் போகிறேனே நான்!

திமிரும் உன் பருவங்கள் கண்டு
உருகுது என் இளமையும் மென்று!

மெல்லிடையோ இது கள்ளிடையோ
போதையில் ஆடி முறிந்து முளைக்குது!

நீ கன்னத்தில் வைத்த கையழகில்தான்
என் எண்ணத்தில் கவியும் வந்து வீழ்ந்ததோ!

7 comments:

  1. கைநொடிக்கும் வேளைக்குள்
    பா வடிக்கும் திறமை கண்டு
    நா நொடிக்க வாழ்த்துகிறேன் மனதார...

    ReplyDelete
  2. நல்ல ரசனை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. காதல் இப்படித்தான் கவிதை எழுத வைக்கும்
    நன்று.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அப்படியெல்லாம் ஒன்றுமில்லை :)

      கருத்துக்கு நன்றி நண்பரே..

      Delete
  4. நீ கன்னத்தில் வைத்த கையழகில்தான்
    என் எண்ணத்தில் கவியும் வந்து வீழ்ந்ததோ!// அட..

    ReplyDelete