சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
என் கஷ்டத்தை தீர்க்க கோவில் நோக்கிய பயணத்தில் பூசாரியின் அர்சனை சீட்டுக்கள் பிச்சைகாரர்களில் தட்டுக்கள் கடவுளின் உண்டியல்கள் என்னை நோக்கியே இருக்கின்றனநான் கடவுளை வணங்கமுன்
என்னை வணங்க வாசலில் சிலர்!!!
-புலோலியூர் கரன்-என் பக்கத்தில் இணைய....http://www.facebook.com/sabaharans
ம்.... உண்மை
ReplyDeleteஅழகாக சொன்னீர்கள்...
கருத்துக்கு நன்றி நண்பரே........
Deleteஉண்மை தான்...
ReplyDeleteம்ம் .. நன்றி நண்பரே..
Deleteஅருமை அருமை
ReplyDeleteதினமும் சந்திக்கிற நிகழ்வுதான்
ஆயினும் அதை வித்தியாசமாக சிந்தித்து
அருமையான கவிதையாக்கியது மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
நன்றி.. உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும்..
Deleteஉண்மைய சொன்னீங்க
ReplyDeleteநாடி கவிதைகள்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
Deleteஇவை தினமும் பார்க்கும் விஷயங்கள் தான் என்றாலும் இப்போது தான் என் கண்களுக்கு தெரிகிறது
ReplyDeleteம்ம் உண்மைதான்...இவை தினமும் பல காலமாக நடக்கும் விடயங்கள்...
Delete