சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

மார்பழகு கெட்டுவிடுமென


மார்பழகு கெட்டுவிடுமென 

மகனுக்கு மாப்பால் கொடுக்கும் 
மங்கையர் உலகினில் 
இவனுக்கு தாயிந்த பசு 
இனி வரும் காலம்தனில் 
முதியோர் இல்லங்கள் 
அடிகொன்று வந்தாலும் 
ஆச்சர்யமில்லை.......!

8 comments:

  1. படமும் பதிவும் என்னுள்
    அதிகம் பாதிப்பை ஏற்படுத்திப் போனது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே இதுவே ஒரு விருது போல இருக்கிறது..

      Delete
  2. இப்படியும் சில நிலைமை..

    ReplyDelete
  3. இவனுக்கு தாயிந்த பசு உண்மை.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே..

      Delete
  4. // மார்பழகு கெட்டுவிடுமென
    மகனுக்கு மாப்பால் கொடுக்கும்
    மங்கையர் //

    சுருக்கென தைத்த நறுக்கு வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... உங்கள் மகிழ்விக்கும் கருத்துக்கு..

      Delete
  5. சரியா சொன்னீங்க நண்பரே

    ReplyDelete