சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

இத்தனை அழகையும் மொத்தமாய் ஓரிடத்தில் !!!


மழைமேகம் நிலவதன்மேல் 

தவழ்ந்து விளையாடுவதுபோல் 
உன் நிலா முகத்தில் 
கார்குழல் வீழ்கிறதே 
உன் தங்க நிற அங்கத்தில் 
ஒட்டிய வைர மூக்குத்தியும் 
மங்கித்தான் போகிறது

உன் முகத்தின் அழகு கண்டு
வானவில்லும் வயிறெரிந்து
கருகித்தான் போனதுவே
கருகிய வானவில்லும்
உன் புருவம் ஆனதெப்போ

காந்தம் கொண்டு செய்த
கருநிலா இரு விழியும்
காளையர் மனங்களை
கவர்வதில் மாயமில்லை

உதட்டோரம் குவியும்
உன் புன்சிரிப்பில்
சிதறாமல் ஓரிதயம்
இருந்துவிட்டால் அது
இப்பாரினிலே அதிசயமே

தூக்கிய கையின்
பாவங்கள் கண்டேன்
பாரினை ஏனோ
மறந்தே போனேன்

உடை திமிரும்
உன் பருவங்களால்
எண்ணங்களும்
உருக்குலைந்து
கற்பனையில் பரவசமும்
காட்சிகளில் வந்ததுவே

குளத்தினில் மிதக்கிறது
பல வண்ண தாமரைகள்
என் மன கிணற்றில்
அலைகிறது
உன் இடையின்
நளினங்கள்

பிரம்மனே
இத்தனை அழகையும்
மொத்தமாய் ஓரிடத்தில்
குத்தகை கொடுத்தது
எப்படி நியாயம் !!!

4 comments:

  1. நீச்சயம் நீயாயமில்லைதான் மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நியாயமில்லை...!

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனைக்கு நன்றி...

      Delete