கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு

ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)

மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)

தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

ராவணன் மகள் சீதைதன் நாட்டு பெண்ணெல்லாம் 

தனக்கு தாரமென்றால் 
தசரதன் மகன் ராமனுக்கு 
அந்நாட்டில் இருப்பதெல்லாம் 
அன்னையும் அக்கா தங்கைகளும்
தந்தை தசரதன் சபலத்தால் 
தனையன் இவன் ரசிக்க தையலில்லை
ராவணன் மகள் தவிர்ந்த பெண்ணெல்லாம்
தங்கைகளாக இருக்குமோ என்ற பயத்தால்
ஏகபத்தினி விரதனாகவிருக்க வியப்பென்ன

மகளுடன் சேர்ந்திருந்தால்
அரியணை அழிந்திடுமென
அரண்மனை சொதிடர் சொல் பயந்து
ராவணன் மகள் சீதை தனை
பேழையில் போட்டு விட்டு விட்டான்
ஜனகள் அதை கண்டெடுத்து வளர்த்து வந்தான்


சூழ்சியில் ராமனும் காடு செல்ல
கூடவே சென்ற சீதையும் துன்புற
ஓடி சென்று ராவணனும் தன் மகளை
இலங்காபுரி அழைத்து வந்தான்
கோபம் கொண்ட ராமனோ
சூழ்சிகள் பல செய்து
மாவீரன் ராவணன் தம்பி உதவிகொண்டு
சிவதாசன் உயிர் பறித்துவிட்டான்..!!!தசரதனுக்கு 63000 மனைவிகளாம் என்ன கொடுமை சார் இது ???
சிவதாசன் -ராவணன்
என்னடா இவன் ராவணன் மகள் சீதை என்கிறான் என்று வியப்பா??

( ராமாயணங்களில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட ராமாயணம் ஒன்றுள்ளது. இது இன்ன பெயர், இன்னாரால் எழுதப்பட்டது என்பன குறிப்பு இல்லாமல் செவிவழிக்கதையாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த ராமாயணத்தின் கதை எப்படி எனில், ராவணனின் மகள் சீதை. சீதை பிறந்த நேரத்தைக் கணித்த ஜோதிடர்கள், சீதையால் லங்கைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால், சிசுவைக் கொன்றுவிடும் படியும் யோசனைக்கூறினர். குழந்தைப் பாசத்தால் கொல்ல மனமில்லாத ராவணன், அந்தசிசுவான சீதையை ஒரு பெட்டியில் வைத்து, தன் நாட்டு எல்லைக்கு அப்பால் விட்டுவரச் செய்தான். அதனை ஜனக மன்னன் கண்டெடுத்து வளர்த்து வந்தான். பின்னர் ராமனை மணம் செய்தப்பிறகு, சீதைக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது. இவை அனைத்தையும் தன் ஒற்றர்கள் மூலம் அவ்வப்போது அறிந்து வந்த ராவணன், தன் மகள் சீதை காட்டில் படும் இன்னல்களைக்கேள்விப்பட்டு வேதைனயடைந்தான். அவளை நல்லமுறையில் வாழவைக்க தன் நகருக்குக் கடத்திவந்தான். தானே அவளது தந்தை என்று ராவணன் கூறியதை சீதை நம்ப மறுத்ததால் போர் ஏற்பட்டது. முடிவில், சீதையின் கால்பட்டதால் லங்கா அழிந்தது. ராவணனும் உயிர் இழந்தான் என்று கதை போக்கு போகிறது...)

கடவுளை காப்பாற்ற ...!!!
பணத்தை பறிகொடுத்த வழிப்போக்கன்
 
நள்ளிரவில் கோவிலுக்கு செற்றான்
கடவுளிடம் முறையிட .......!!!

கோவில் பூட்டபட்டிருந்தது
கடவுள் சிலைகளையும்
அவர் நகைகளையும் காப்பாற்ற..!!!

முயற்சியும் இல்லை தோல்வியும் இல்லை !!!


தேவைகள் எல்லாம் காலடியில் வந்தால் 

தேடல்கள் இல்லை தடைகள் இல்லை 
முயற்சியும் இல்லை தோல்வியும் இல்லை 
சாதனையுமில்லை வெற்றியுமில்லை 
என்ன இருந்திட போகிறது இந்த 
உப்பில்லாத உணவுபோலான 
சோம்பேறி வாழ்கையில்
நானாகவே கெட்டு அறிந்தேன்
நால்வர் புறக்கணிப்பில் புரிந்தேன்
எத்தனை வயதாநாலும் புரியாத
கோடிகள் பல கொட்டி கொடுத்தாலும்
கிடைத்திடா ஞானத் தத்துவத்தை
கோடிகள் மீதான ஆசையின் பாடத்தில்
பட்டறிந்தேன் !!!

எனக்குள் எட்டி பார்த்தேன் ஏங்கித்தான் போனேன் ...!!!என்னை தவிர எல்லோரும்
ஏன் இப்படி இருக்கிறார்கள்!!!

அவனை  பார்த்தேன்
ஆயிரம்  அழுக்கு
இவனை பார்த்தேன் 
எத்தனை இழுக்கு!!!

நித்தமும் இவர்களுக்கு
இலவச ஆலோசனை 
அள்ளி அள்ளி கொடுத்தேன் 
பயனின்றி தலை கவிழ்ந்தேன்
என்ன மனிதர்கள் இவர்களென்று!!!

என்ன செய்வதென தெரியாமல்
எனக்குள் எட்டி பார்த்தேன் 
ஏங்கித்தான் போனேன் 
வெட்கி  சுயநலம் கொண்டேன் 
இனி எனக்கு மட்டுமே 
இலவச ஆலோசனை!!!

சமூகத்தின் மீது எனக்கு எத்தனை அக்கறை
ஏனோ என்மீது இல்லாமல்  போனது
என்னை போல் பலர் இங்கு பொதுநலவாதிகள்!!!

காமம் பற்றி பேசுவோம் (18+)காமமதில் கலங்கமில்லை 

காயமிதன் தேவையதில்
காமனவன் லீலையினால் 
கற்பிழந்த கடவுள் பலர்!!!

காமமின்றி பூமியேது 
கற்பிக்கத்தான் யாருமில்லை
கண்டபடி கற்றுவிட்டோம்
கண்டதெல்லாம் காமமென்று!!!

மெய்யிரண்டின் தேவைதனை
ஒன்றைஒன்று அறிந்திடனும்
கொடுத்து பெற புரிந்திடனும்
அருவருப்பு பார்த்து நின்றால்
திருப்தியது கிடைப்பதில்லை
கிளியிருக்க குரங்கு தேடும்
காரணமும் இதுவதுவோ
முகம்சுழிக்கா முறை இதைதான்
முந்தானை முடிச்சென்றார்!!!

இன்பமது நிலைத்திருக்க
இடையிடையே இருவருமே
தாழ்வுமனம் தற்பெருமை
அடியோடு அழிந்திடவே
இதைப்பற்றி பேசிடனும்
குறையில்லா வாழ்வுபெற
குறைகளிதை மாற்றிடனும்!!!

வெளிப்படையாய் பேசினால்
ஆயிரம் குறைசொல்லும்
கடைசிவரை ஒளித்தே வைக்கும்
முகமூடி சமூகமிது
கூறிடவே கூச்சபட்டு
வாழ்வழித்த தமிழர் பலர்
இது போல இனி வேண்டாம்
அராய்ந்து பார்த்திடுவோம்
அனைத்தையுமே பேசிடுவோம்
அன்போடு இன்பமென
உனக்கென உள்ளவரோடு
உன்னதமாய் வாழ்ந்திடவே
உரிமையாய் பேசிடுவோம்
உண்மையாய் வாழ்ந்திடுவோம்!!!

என்னையறியாமல் எனக்குள் !!!
அன்றில் இருந்து 
என் மன புத்தகத்தில்
ஐம்புலன்கள் உதவியில் 
எண்ண பேனா கொண்டு
நான் கிறுக்கியவையெல்லாம்
இன்று என் குணங்களாக
எனக்குள் என்னோடு
போராட்டம் நடத்துகின்றன

நான் கிறுக்கியவை
என் பெற்றவர்கள்
சமூகத்தவர்கள்
என் சூழல்
எனக்குள் திணித்தவையை
சாடியே இருந்தது

அன்று நானறியாமல்
எனக்குள்
விதைத்ததை
இன்று அறிந்தும்
அறுவடை செய்யாமல்
தவிர்க்க முடியவில்லை

அன்று தெரியாமல்
திண்ற உப்புக்காக
இன்றும் தண்ணீர்
குடித்துகொண்டிருக்கிறேன்

மனம்
பழகி போனால்
குணம்

சிற்பி கையில்
இருக்கும் களிமண்
வடிவம் பெறுவது
அவனின் சிந்தனையை பொறுத்ததே

அக்கிரகாரத்து குழந்தை
மாமிசம் கண்டு குமட்டுகிறது
தாய்லாந்து குழந்தை
கரப்பான் பூச்சியை புசிக்கிறது

குழந்தையின்
மனம்
அவர்கள் வளரும்
சூழலை பொறுத்ததே!!!

வளரும் குழந்தைகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுப்போம்!!!

கடவுளுக்கு எதுக்காக புரியாத மொழி?? இடைத்தரகர்கள்??


இப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கையே சுத்தகமாக இல்லாமல் போய் விட்டது. அதுக்காக என்னை போல எல்லோரும் நம்பிக்கை இல்லாமல் இருக்கவேண்டும் என்று நான் நினைக்க முடியாது திணிக்கவும் முடியாது அது அவரவர் விருப்பம். அப்படி விவாதித்து எந்த பயனோ, முடிவோ கிடைக்க போவதில்லை.கிடைக்கவும் இல்லை.இது இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சனை அல்ல பல காலமாக நூற்றாண்டாக நடக்கின்ற வாதம் இதுவரை முடியவில்லை, முடியபோவதும் இல்லை.

நான் உங்கள் வழிக்கே வருகிறேன் உங்கள் பார்வையிலேயே சிறிது சிந்திக்கலாம்...

கடவுள் நம்பிக்கை பாமர மக்களுக்கு பல சந்தர்ப்பத்தில் உதவத்தான் செய்கிறது மனோவியல் ரீதியில் அதன் காரணங்கள் உண்மையாகவே இருக்கிறது. அதுக்கு காரணம் அவர்களது நம்பிக்கை. ஒரு தவறை செய்தவன் அதை உணரும் போது அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவராமல் இருந்தால் அவனை அந்த குற்ற உணர்வே அழித்து விடும். ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவன் கடவுளிடம் மன்னிப்பு கேட்டு அந்த பாரத்தை இறக்கி வைக்கிறான். இது போலவே அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கும் ஒருவன் இந்த நம்பிக்கையில் தனது தோல்வியை மறந்து மீண்டும் இறைவனை வணங்கி இம்முறை வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் மீண்டும் முயற்சி செய்கிறான் தாழ்வு மனப்பாங்கினை சுமக்காமல். வெற்றியும் பெறுகிறான்.பேய் பிடித்து விட்டது என்ற நம்பிக்கையை இந்த கடவுள் நம்பிக்கையால் போக்க,இப்படியாக சில...பாமரர்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை ஒன்று இருந்து அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் கொடுக்காமல் சந்தோசத்தை கொடுக்குமாக இருந்தால் எதுக்காக அதை தவறென்று சொல்ல போகிறோம்? அது வேண்டாம் என்று சொல்ல போகிறோம்? இங்கு இந்துமதம் என்ற போர்வையில் எப்படியான இடங்களில் பாமாரர்கள் ஏமாற்ற படுகிறார்கள் தங்கள் நம்பிக்கையை தளர விடுகிறார்கள் என்று பார்ப்போம்.

கடவுள் எங்கும் இருப்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொல்கிறார்கள் அப்படி பட்ட இறைவனை எதுக்காக கோவிலுக்கு சென்று பணம் கொடுத்து புரியாத பாசையில் சொல்லி வணங்க வேண்டும்?


அதுக்கும் விளக்கம் சொல்கிறார்கள் பசுவின் உடலில் இரத்தம் எங்கு இருந்தாலும் இரத்தத்தில் இருந்து வரும் பால் காம்பில் மட்டும் தானே கிடைக்கிறது அதுபோலவே கோவில் என்று சொல்கிறிர்கள். அப்படியானால் எதுக்கு புரியாத மொழியில் அர்ச்சனை? கதிர்காம கந்தன் கோவிலில் வாய் கட்டி செய்யும் பூசை முறையில் கடவுள் ஓடி போய் விட்டரா? இல்லையே அருள் மிகுந்த கொவிலாக இன்னும் வழிபட்டுகொண்டுதானே இருக்கிறார்கள். அப்படியானால் மந்திரம் என்பது இறை வழிபாட்டுக்கு தடை இல்லை.

அடுத்து கடவுள் குடி கொள்ள சுத்தமான ஒரு இடம் வேண்டும் என்பதால் கோவிலை சொல்கிறிர்கள்.அதே சுத்தமான கடவுள் விரும்பும் இடமாக உங்கள் வீட்டிலேயே ஒரு அறையை வையுங்கள் கடவுளை அங்கு தேடுங்கள் அதன் பின் எதுக்கு கோவில்? பணம் கொடுத்து அர்ச்சனை? தெரியாத மொழி ? உங்களுக்கு நம்பிக்கை இல்லையா உங்கள் வீட்டில் ஒரு இடம் அமைத்து பக்தியோடு வழிபட்டால் இறைவன் அங்கு குடிகொள்வார் என்று.அப்படியும் வணங்கி விட்டு கோவிலிலும் எதுக்கு சென்று வணங்க வேண்டும்?வேறு வேறு கடவுளா? இல்லை கோவிலில் அருள் அதிகம் கிடைக்குமா?

பசுவின் காம்பில் இருந்து பால் கிடைப்பது போல உங்கள் உடலில் மனதை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் அங்கு இறைவனை குடி அமர வையுங்கள் எந்த அசுத்தங்களையும் உங்கள் மனதை நெருங்காமல் பார்த்து கொள்ளுங்கள் அந்த அருள் பொழியும் இடமாக உங்கள் மனது விளங்கும். அப்படி யாரும் செய்வதில்லை ஏன் என்றால் நம்பிக்கை இல்லை எங்களால் சுத்தமாக இருக்க முடியாது அதனால் அது சாத்தியம் இல்லை என்ற நம்பிக்கை அதனால் வீட்டு பூஜை அறையில் தேடுவது அதை சுத்தமாக வைத்து வழி படுவது அதிலும் நம்பிக்கை இல்லாமை மேலும் கோவிலுக்கு இழுத்து செல்கிறது உண்மையில் நம்பிக்கை இருகிறதா உங்களுக்கு? நாயன் மார்கள் எல்லோரும் கோவில் சென்று கடவுளை காணவில்லை அவர்கள் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.

முதலில் உங்கள் நம்பிக்கையை வளர்த்துகொள்ளுங்கள் இன்று பலர் கோவில்களில் நம்பிக்கை அற்றவர்களாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் செல்ல தொடக்கி விட்டார்கள் அதுக்கு பெரும் தன்மையாக ஒரு விளக்கம் சொல்லுவார்கள் எல்லா மதமும் ஒன்றுதான் என்று. காரணம் அதுவல்ல கடாவுளை வெளியில் தேடுவதே.

இப்படியான நம்பிக்கை இல்லாத பக்தர்களே இன்று அதிகம் பணத்தினால் கடவுளை காணலாம் என எண்ணுகிறார்கள் பெரிய யாகம் நடத்துகிறார்கள் பல ஆயிரம் செலவழித்து பூஜைகள் செய்கிறார்கள் எதுவும் திருப்தி இல்லை காரணம் நம்பிக்கை இல்லை. நாடு நாடாக திருத்தலங்களை தரிசிக்கிறார்கள் இவர்கள் தான் எல்லாவற்றாலும் பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்து சாமியார், மந்திர வாதிகளை நாடுகிறவர்கள். இவர்கள் தான் மூடநம்பிக்கையை விதைப்பவர்கள்.

கடவுள் என்ற ஒருவன் இருந்தால் உங்கள் மனது சுத்தமாக இருந்தால் அங்கு நிச்சயம் இறைவன் குடிகொள்வான் இதுக்கு மாற்று கருத்து உண்டா?

உங்களால் முடியவில்லையா எங்கு தேடினாலும் உங்களுக்கு கிடைக்க போவதில்லை. உங்கள் மனதை அழுக்காக வைத்து கொண்டு எத்தனை முறை நீராடினாலும், புதிய உடை அணிந்தாலும் எத்தனை கோவில்கள் சென்றாலும் எந்த பயனும் இல்லை.

கடவுளை உங்களுக்குள் தேடுங்கள் இல்லையா? வர வையுங்கள் அதுக்கான ஆயத்தங்களை செய்யுங்கள்.

அதை விடுத்து உங்களை பலர் அருள் வாங்கி தருவதாக தரகராக இருந்து ஏமாற்றுவதை மூட நம்பிக்கைக்கு அடிமை ஆவதால் தான் நாங்கள் விவாதிக்க வேண்டி இருக்கிறது.

நம்பிக்கை, மூடநம்பிக்கையாகாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்களை நம்புங்கள் எந்த தரகர்களும் தேவை இல்லை.
கடவுள் என்று ஒன்று இருந்து உங்கள் மனதை சுத்தமாக வைத்து இருந்தால் அங்கு கடவுள் குடிகொள்ள மாட்டாரா? இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?அப்படியானால் எதுக்கு வெளியில் தேடுகிறிர்கள்?


கடவுள் நம்பிக்கை இருந்துவிட்டு போகட்டும் அது அவரவர் மனது சம்பந்தபட்ட விருப்பம். ஆனால் அந்த நம்பிக்கையை வைத்து மூட நம்பிக்கைகளை வளர்ப்பதோ, ஏழைகள்+ பாமரர்கள் சுரண்ட படுவதோ ஏற்றுகொள்ள முடியாதது .....

நீலப்படம் (Blue Film )........ (18+)
நேற்று மாலை எனது நண்பன் ஒருவனை பல வருடங்களுக்கு பின் திடீரென வீதியில் எதிர் திசையில் சந்திக்க நேர்ந்தது. பல வருடமாகியதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்தது ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இனம்கண்டுகொண்டோம் அவனை பார்த்ததும் எனது மனது ஒரு பெயரை முணுமுணுத்தது அது வேறு ஒன்றும் இல்லை அவனுடைய பட்ட பெயர்தான் " உடுப்பு ic " , உடனே உதட்டில் ஒரு நக்கல் சிரிப்பு வந்து ஒட்டிகொண்டது அவனும் அருகில் வந்தான் பட்ட பெயர் கொண்டு அவனை அழைத்தேன் "நீ இன்னும் இதை மறக்கவில்லையா" என்றான்.எப்படி மறப்பது சொல்லுங்கள் இவன் செய்த வேலை மறக்க கூடியதா? சொல்லுங்கள்!!!!

சில வருடங்களுக்கு முன்.........

எனது நண்பனின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணின் திருமணம் அதுக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தது நாளை திருமணம் அதனால் பலகாரங்கள் செய்வதில், திருமண வேலைகளுக்காக அக்கம் பக்கத்த்தில் உள்ளவர்கள் எல்லோரும் பக்கத்து வீட்டில் இருந்தார்கள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்த நினைத்து நண்பனின் வீட்டில் நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு மாதிரியான படம் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்கள் ஆனால் அங்குதான் அவர்களுக்கு ஆப்பு காத்திருந்தது நண்பனின் பாட்டிக்கு கண் பார்வை மிகவும் குறைவு ஏன் இல்லை என்றே சொல்லலாம் அப்படி இருந்த பாட்டிக்கு அன்று எப்படி கண் தெரிந்ததோ நண்பர்களை பார்த்து கேட்டிருக்கிறார் இதென்ன தொலைகாட்சி பெட்டியில் இருப்பவர்களுக்கு உடுப்பு ஒன்றும் இல்லை என்று, அறிவு பூர்வமான எனது நண்பன் பாட்டிக்கு சொல்லி இருக்கிறான் பாட்டி TV ல உடுப்பு IC அடிபட்டு போச்சு அதுதான் அப்படி தெரிகிறது என்று அது மட்டும் இல்லாமல் பாட்டிக்கு விளக்கம் சொல்லி இருக்கிறான் Sound IC பழுதடைந்தால் சத்தம் வாராதது போல , கலர் IC பழுதடைந்தால் கலர் இல்லாமல் போவது போல , உடுப்பு IC பழுதடைந்தால் உடுப்பு வராது என்று. பாட்டியை சமாளித்தது வீர தீர பராகிரம செயலாக நினைத்துகொண்டிருக்கையில் ...


மறுநாள் திருமணம் முடிந்து. அப்போதெல்லாம் யாழ்பாணத்தில் திருமண வீட்டில் இரவில் திரை படம் போடுவது வழமை அதுக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது அதற்கு நண்பனின் தொலைக்காட்சி பெட்டிதான் கொண்டு சென்றனர் இப்போது திருமண வீட்டில் தனது வீட்டு தொலைக்காட்சி பெட்டி இருப்பதை தெரிந்துகொண்ட பாட்டி முன்னு வந்து பலர் முன்னிலையில் தொலைக்காட்சி பெட்டிக்கு குறுக்காக நின்று கொண்டு இந்த தொலைக்காட்சி பெட்டிக்கு உடுப்பு IC வேலை செய்யவில்லை நேற்றுத்தான் தம்பியும் நண்பர்களும் பார்க்கும் போது உடுப்பில்லாமல் எல்லோரும் வந்தார்கள் தம்பி எங்கே இருகிறாய் இவர்களுக்கு சொல்லு என்றார் என் நண்பனை பார்த்து....

அப்போது எனது நண்பனின் முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலை இன்றுவரை எனக்கு இருக்கத்தான் செய்கிறது......

நண்பனின் மானம் பலர் மத்தியில் போனது மட்டுமில்லாமல், அன்றில் இருந்து நண்பனுக்கு உடுப்பு IC என்ற பெயர் வழக்கில் வந்துவிட்டது...

இத்தனை வருடம் கழித்து நண்பனை காணும் போதும் எனக்கு இந்த பெயர்தான் முதலில் வந்து விழுகிறது..
பார்த்தீர்களா? பாட்டிக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு தானே அவரை ஏமாற்றலாம் என்று எண்ணியதன் முடிவு ...........

எங்கள் தப்புகளை அடுத்தவர்களின் அறியாமையின் அதிக நாட்கள் மூடி மறைக்க முடியாது அந்த அறியாமையே அதை வெளிகொண்டுவந்துவிடும்.

இன்று எல்லா துறைகளும், அரசியல், ஆன்மீகம் , வியாபாரம் எல்லாமே பாமரர்களை ஏமாற்றுவதாகவே உள்ளது...........
இவை என்று மாறுமோ?


மீள் பதிவு...

தாயா இவள் பேய்...!!!


கூர்ப்படைந்த குரங்கிவள்

மரபணுவில் மனிதனிவள் 
மனிதத்தில் அரக்கியிவள் 
உடையணிந்த ஊர்வசி 
உள்ளத்தில் ராட்சசி 
குரங்கிடம் கற்கவேண்டும் 
தாயென்றால் யாரென்று
தாய்மையில் பெண் பேரழகு
தாயிவளோ பெண்மைக்கு பேரிழுக்கு
அம்மா ஆறறிவு இருந்தென்ன
குற்றுயிராய் குழந்தை தொங்க
உன்போல கொடூர தாய்க்கு
மனிதனாய் பிறப்பதைவிட
இக்குரங்கிற்கு குட்டியாய்
பிறந்திருந்தால் பூலோகத்தில்
பேரின்பம் அடைந்திருப்பான்!!!

-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.விஞ்ஞானம்,மருத்துவம்  வளர்ந்துகொண்டே போகிறது ஆனால் மனிதன் முன்னேறுகிறானா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது வளர்ச்சி என்பது மனிதனை அழிப்பதாக இருந்தால் அது வளர்ச்சியல்லவே இன்றைய காலத்தில் முன்னைய காலத்தில் இருந்த மருத்துவத்தை விட எத்தனையோ மடங்கு முன்னேறிவிட்டது ஆனால் மனிதனின் சராசரி ஆயுட்காலம்,ஆரோக்கியம் முன்பை விட வளர்ச்சியடையவில்லை எந்த விதத்தில் எங்கள் வளர்ச்சி இருக்கிறது??? நிற்க..

கருவில் இருக்கும் 3 மாத பெண்  குழந்தை அப்பாவாகியது.இது சாத்தியமில்லையா? ஏன் சாத்தியமில்லை ???????? சாத்தியமாம் விஞ்ஞானம் சொல்கிறது.

கருவில் இருக்கும்  குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........  இதுதான் விஞ்ஞான வளர்ச்சி   அடைந்துள்ள  பரிணாமம் இது மனிதனுக்கு அதுவும் ஆண்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கிறது இதற்கு காரணம் குளோனிங் என்ற முறைதான்.பெண்ணின் கருமுட்டையில் உள்ள மரபணுவை நீக்கி எந்த ஆணுக்கு குழந்தை வேண்டுமோ(உயிரணு தேவையில்லை)  அவரின் உடலில் எங்காவது ஒரு மரபணுவை கொண்டுள்ள செல்லை பிரித்தெடுத்து(இது கண்டிப்பாக ஆணின் செல்லாகத்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை) மரபணு நீக்கிய கருமுட்டைக்குள் செலுத்தி பக்குவமாக கருவை வளரசெய்யவேண்டும் இந்த கருவை பெண்ணின் கர்பப்பைக்குள் செலுத்தி குழந்தை உண்டாக்கும் தன்மைதான் குளோனிங் என்கிறார்கள் இது பல மிருகங்களில் செய்து நிரூபித்தாலும் மனிதனின் இன்னும் செய்யப்படவில்லை என்கிறார்கள். மனிதனை குளோனிங் மூலம் உருவாக்கபோகிறோம் என்ற அறிக்கைக்கு எதிராக கிளம்பிய எதிர்ப்பால் இந்த சோதனை நிறுத்தபட்டது சில நாடுகளில் இதற்கு சட்டபூர்வமான தடையும் இருக்கிறது.இதையும் மீறி சில நிறுவனங்கள் இரகசியமாக இந்த அராட்சியை வெற்றிகரமாக செய்து மனிதனை உருவாக்கிவிட்டதாக சிலர் தெரிவிக்கிறார்கள்.

இப்படியான மனிதனை உருவாக்கினால் பிறக்கும் குழந்தையின் செல்லின் வயது எந்த மனிதனின் (ஆணோ,பெண்ணோ ) செல்லை கருமுட்டையோடு சேர்த்தார்களோ அந்த செல்லின் வயதை உடையதாகவே பிறக்கும் குழந்தையின் செல் அதே முதிர்ச்சியில்  இருக்கும் எனவே அது அறிவில்,அனுபவத்தில்,பாலியல் தன்மையில் செல்லை எடுத்த நபரினை ஒத்ததாகவே குழந்தை பருவத்திலேயே இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியானால் குழந்தை பிறந்ததுமே பேசுமோ???

நான் பலமுறை நினைத்ததுண்டு இப்போது இருக்கும் அறிவு சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும் என் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும் தவறான முடிவுகள் தவிர்க்கபட்டிருக்கும் என பல நேரங்களில் நினைத்திருக்கிறேன். அது இன்று சாத்தியமாகி இருக்கிறது எனது செல்லில் இருந்து உருவாகும் குழந்தை அச்சு அசல் என்னை போலவே என் அறிவுடன் உருவத்திலும் பிறக்கும் என்றால் அதிசயம்.

ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லை உருவாக்குதல், ஒரு செல்லில் இருந்து ஒரு உறுப்பை உருவாக்குதல்,ஒரு செல்லில் இருந்து குழந்தையை உருவாக்குதல் இப்படியாக இந்த குளோனிங் மனித இனத்துக்குள் நடைமுறைக்கு வந்தால் என்னென்னவெல்லாம் ஆகும் நினைத்து பார்க்கவே முடியவில்லை.ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லை உருவாக்க முடியும் என்றால் மனிதனுடைய பழுதடைந்த செல்களுக்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி மாற்ற முடிந்தால் சிறப்பு, அதிலும் அவர்கள் இளமையாக இருக்கும் போது சேமித்து வைத்து அவர்கள் செல்லை வயதாகியபின் மாற்றமுடியுமேன்றால் இளமை தொடரும். ஒரு செல்லின் இருந்து ஒரு உறுப்பை உருவாக்க முடிந்தால் சிறுநீரகம் ,இதயம் இப்படி உடல் உறுப்புகளை அவரவர் செல்களில் இருந்து உருவாக்கி இலகுவாக மாற்று சிகிச்சை செய்துவிட முடியும்.

ஒரு கருவை உருவாக்க கருமுட்டை மரபணு போதும் என்றால் அந்த மரபணு ஆணினுடையதாகத்தான் இருக்க வேண்டுமென்பதல்ல ஒரு பெண்ணின் மரபணு நீக்கபட்ட கருமுட்டையுடன் அப்பெண்ணின் உடலில் உள்ள மரபணுவை சேர்த்தும் கருவை உருவாக்கிவிடமுடியும் எனவே இங்கு ஆணின் தேவை இல்லாமல் போகிறது.பெண்ணும் பெண்ணும் சேர்ந்து திருமணம் முடிக்கும் இந்த காலத்தில் அவர்கள் இருவருக்கும் ஒவ்வொருவரின் மரபணுக்களை மாற்றி மாற்றி மற்றயவர்களின் கருமுட்டைக்குள் செலுத்தி கருவை உருவாக்கி அவர்களுக்கு வாரிசுகளை உண்டாக்கிவிடலாம் ஆனால் இந்த விடயத்தில் கூட கருமுட்டை இல்லாமல் ஆண்கள் இருவர் சேந்து வாரிசுகளை உருவாக்க முடியாது. ஆண்களை இங்கேயும் இயற்கை வஞ்சித்துவிட்டது.ஒரு ஆணினதும் பெண்ணினதும் உறவின் போது இருவரினதும் மரபணுக்களோடு சேர்ந்த உயிரணுவும் கருமுட்டையும்  சேர்ந்து இயற்கையாக உருவாகும் புதிய கலவை மரபணுகொண்டகரு மூன்றே மாதத்தில் ஒரு வடிவத்துக்கு வந்துவிடும் அந்த மூன்றே மாத கருக்குழந்தையின் மரபணு ஒன்றை எடுத்து அந்த குழந்தைக்கு இன்னொரு குழந்தையை உருவாக்கிவிடலாம் இப்போது மூன்றே மாத கருகுழந்தை அப்பாவாகிவிடும். ஒருவேளை கருவில் இருக்கும் குழந்தைக்கு எதாவது ஆபத்து வந்துவிட்டாலும் அந்த மரபணுவை முதலிலே எடுத்து வைத்துகொண்டால் அதே குழந்தையை உருவாக்கிவிடலாம்.

இப்ப சொல்லுங்கள் கரு உருவாக கருமுட்டையும் மரபணுவும் போதுமென்றால் கருவில் இருக்கும் மூன்று மாத கருவின்(பெண்ணாக இருந்தாலும் பிரச்சனை இல்லை)) செல்லை எடுத்து இன்னொரு மரபணு நீக்க பட்ட  கருமுட்டையோடு சேர்த்து கருத்தரிக்க செய்தால் கருவில் இருக்கும் மூன்று மாத பெண் சிசு அப்பாவாகாதா???????

கருமுட்டை உற்பத்தி செய்யமுடியாத பெண்ணுக்கும், உயிரணு உற்பத்தி செய்யமுடியாத ஆணுக்கும் அவரவர் மரபணுமூலம் இந்த குளோனிங்  மூலம் வேறொரு பெண்ணின் மரபணு   நீக்கபட்ட கரு முட்டையுடன் சேர்த்து கரு உண்டாக்கி அவர்களுக்கு வாரிசுகளை உண்டாக்கலாம் இதை தவிர இவர்களுக்கு வேறுவழியில் குழந்தையை உருவாக்க முடியாது. 

இந்த மரபணுக்களை பிரித்து அவற்றினைகொண்டு கருவை உருவாக்குவது போல மரபணுவில் உள்ள பரம்பரை நோய்கள் போன்றவற்றை பிரிக்கமுடிந்தால் இன்னும் சிறப்பு. 

இந்த குளோனிங் முறை பாவனையில் வந்தால் ஆண்கள் பெண்கள் சேர்ந்து வாழும் தேவை அருகி போகும். குழந்தை பெறுவதற்கு ஆணின் சரி அரைவாசி பங்கு தேவை என்ற சினிமா வாசகங்கள் எல்லாம் இனி இருக்காது. ஆண்கள் இல்லை என்றாலும் பெண்கள் மூலமாக மனித சமுதாயம் இருக்கும் என்பதால் ஆண்களின் முக்கியத்துவம் குறைந்துபோகும். ஆண் என்பவன் பெண்ணுக்கு காம இன்பம் கொடுபதுக்கு மட்டுமே தேவை என்பது போல ஆகிவிடும். 

பிரபலங்கள் பணக்காரர்கள் தங்கள் செல்களில் இருந்து தங்களை போலவே பலரை உருவாக்க முனைந்தால் ஏற்கெனவே சனத்தொகை பெருக்கத்தால் திண்டாடும் உலகம் வளங்கள் அழிந்துபோய் பொருளாதாரத்துக்காக ஒவ்வொரு நாடும் அடித்துகொள்ளும் மனிதர்களுக்குள் மனிதநேயம் இருக்காது. ஒரே உருவத்தில் பலர் இருந்தால் என்னவாகும் அடையாளம் காண முடியாமல் பல ஏமாற்றங்கள் நிகழும். அறிவில் குறைந்தவர்கள், பரம்பரை நோயுள்ளவர்கள் ஒதுக்கபட்டு அறிவாளிகள் விஞ்ஞானிகள் வீரர்கள் செல்லில் இருந்து பலரை ஒவ்வொரு நாடும் உருவாக்க தொடங்கிவிடும். இப்படி ஒரு நிலை வந்தால் கற்பனை பண்ணி பார்க்கவே முடியவில்லை இயற்கை சமநிலை முழுவதுமாக குழம்பி போகும்.

அணு கண்டுபிடிப்பு ஆரம்பகாலத்தில் மனிதர்களால் போற்றபட்டது ஆனால் இன்று அது பாரிய அச்சுறுத்தலாக இருக்கிறது விஞ்ஞான அதிவேக வளர்சி மனித வாழ்க்கைக்கு அழிவையே தேடிதருவதாக  அமைந்திப்பதை நாங்கள்  இன்றைய உலக நடத்தைகளின் ஊடாக புரிந்துகொள்ளகூடியதாகவே இருக்கிறது. சில புதிய கண்டுபிடிப்புக்களால் இருக்கும் நன்மைகளை விட பாதிப்புதான் அதிகம் இருக்கும் என்று தெரிந்து சில நாடுகள் மற்றைய நாடுகளை விட தங்களை தொழில்நுட்பத்தில் வளர்ந்ததாக காட்டிக்கொள்ள மக்கள் சுகந்திரத்தை,பாதுகாப்பை  பாதிக்கும்,அச்சுறுத்தும் கண்டுபிடிப்புகளை நடைமுறையில் வைத்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியால் மனித வாழ்க்கைக்கு வந்த  கேடு என்றுதான்  சொல்லவேண்டும்.


இந்த குளோனிங் முறை  கண்டுபிடித்ததில் இருந்து மதங்கள் எல்லாம் இந்த முறை தங்கள் மதத்தில் இருப்பதாக அலட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. 


இனிவரும்காலத்தில் கண்டிப்பாக இந்த குளோனிங் நடைமுறைக்கு வரத்தான் போகிறது இப்போது இல்லை என்று சந்தோசபட்டா லும் எதாவது சில நாடுகள் இதில் எதாவது சாதனைகள் செய்ய ஆரம்பித்தால் மற்றைய நாடுகளும் ஆரம்பித்துவிடும் சட்டங்கள் மாற்றப்படும்.

இந்த மாற்றங்கள் மனிதனை எங்கு கொண்டுசென்று விடும் என்பது யாருக்கும் தெரியாது..........

விஞ்ஞானத்தால் மனித வாழ்வை முன்னேற்றுகிறதா?  பசித்த வயிறுகள் பல இருக்க மனிதநேயமற்ற கொடிய கொலைகள் தடுக்கபடாமலிருக்க வளர்ச்சிஎன்ற பெயரில் இவை எதை சாதிக்க போகின்றன??????????

நம்(பிக்)கையில்தான் ...!!!இந்த நிலத்தில் உள்ள 

ஏற்ற இறக்கம் பொல 
நம் வாழ்கையிலும் 
இன்பமும் துன்பமும் 
இருக்கத்தான் செய்கிறது 
இரசிக்கும் படி அதை 
மாற்றும் சூட்சுமம்
நம்(பிக்)கையில்தான்
இருக்கிறது!!!!


http://www.facebook.com/sabaharans
-புலோலியூர் கரன்-

ஏழைக்கு கல்வி கனவு..!!!எட்டா உயரத்தில் 

வியாபாரக்கல்வி 
ஏறி நின்றால் 
ஏழையின் வாழ்வு 
இப்படி வீதியில் 
நசுங்கி நிக்கும் ....!!!

நடு வீதியில் தெய்வம்...!!!நடமாடும் தெய்வத்தை 

நடு வீதியில் உதறிவிட்டு 
கல்லாய் போன உன் நெஞ்சு 
ஆயிரம் கல்லுக்கு அபிசேகம் 
தினமும் செய்வது எதுக்காக
கோவில் பலவேறி வரமென 
வலி தாங்கி உனை பெற்று
பூமியிலேயே சொர்கத்தை
வரமாக கொடுத்த அன்னைக்கு
நன்றிகடனாக நீ கொடுத்தது
முதியோர் இல்லம் என்கிற நரகத்தை
பூமியும் மனிதரை அழிக்க முயல்கிறது
உன் போன்ற மனிதர்கள் இருப்பதனாலோ....!!!-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

காதலின் குழந்தை கல்லறை...!!!


ஏறி வந்த வாழ்க்கை படிகட்டுகளில் 

ரசித்து புரிந்தவை சில
பிடிக்காமல் விலகி வந்தவை சில 
புரியாமல் கடந்து வந்தவை பல 
ஒரு புதிர்-விடை தேடி 
ஓடி முடிவதற்குள் 
அடுத்தடுத்த கேள்விகள்
வாழ்கையின் அர்தத்தை
சிந்திக்க நேரமற்று
ஓட்டம் மட்டும் முடிவாக
இதயவோட்டம் நிக்கும்வரை...!!!

ஆயிரம் ஆசைகள்
வந்து போயின
அதில் அடைந்தது என்ன
இழந்தது என்ன
அர்த்தமற்ற சிந்தனை மட்டும்தான்
நிரந்தரமாக ஆரம்பித்த இடத்திலேயே
விடைகள் மட்டும் சூன்யமாக ...!!!

கடந்து வந்த காலத்தில்
சூழ்ந்துகொண்ட பிரச்சனைகளில்
ஓடி ஒளிந்ததனால்
கிடைதவையெல்லாம் அனுபவம்
என்ற வீராப்பில்
உன் வயது என் அனுபவம் என்று
அடுத்தவர்களிடம் வாய்சுனாமி
அடித்தவரெல்லாம்
வாழ்க்கையை முகம் கொடுக்கமுடியாமல்
மூச்சு முட்டி மூழ்கி இறந்தவர்களே
பிணங்கள் மட்டும் பேசிக்கொண்டு திரிகிறது...!!!

வயதல்ல அனுபவம்
முன்னின்று முகம் கொடுத்து
முயற்சி செய்ததில்
கிடைத்த தோல்விகள்-அறிவுகள்
அதன்பால் கொண்ட
வெற்றிகள் தான் அனுபவம் ...!!!

நெற்றிகாசை எதிர்பார்த்து
எரியாமல் காத்திருக்கும் பிணம் வரை
பணத்தின் மேல் கொண்ட மோகம் தீருவதில்லை...!!!

மனங்களை நோகடித்தேனும்
பணங்களை அடையலாம் தவறில்லை
பணங்களை இழந்து மனங்களை ஜெயிப்பதில்
உடன்பாடில்லா புதுமை விதிகள்
மனிதத்தை வளர்ப்பதற்காக என்று
நமக்குள் சொல்லிகொள்கிறோம் ...!!!

பருவத்தில் வரும் காதல் போல்
ஈர்பில் வருவது இவையெல்லாம்
உண்மை காதல் மலர்ந்து
அவர்கள் குழந்தை பிரசவிக்கும்வரை
உண்மைபோல் தோன்றும் இவையனைத்தும்
பொய்யாக்கும் பிறந்த குழந்தை...!!!

எதுதான் உண்மை காதல்
மண்ணுக்கு எங்கள் மேல் இருக்கும் காதல்
அவர்கள் குழந்தைதான் எது
கல்லறை.

-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

காதலன்,காதலி மனதில் இடம் பிடிப்பதெப்படி.


மனம்..
மனம் பழகிபோனால் குணம்.


மனம் பற்றி அறிந்துகொள்ள எடுக்கும் முயற்சிகள் சமுத்திரத்தின் நடுவே திடீரென குதிப்பது போலான ஒன்று ஆனாலும் வேறு வழியில்லை எங்களை ஆட்டி படைத்துகொண்டிருப்பது எங்கள் மனம் தான். எங்கள் ஆசைகளை உருவாக்குவதும் அதில் ஏற்படும் முடிவுகளை பொறுத்து மகிழ்ச்சியையும், சோகத்தையும் உருவாக்குவது இந்த மனம் தான். எனவே இதை பற்றி அறியாமல் வாழ்கையை அறியமுடியாது. நாங்கள் சும்மா இருந்தாலும் எங்கள் மனம் எங்களை சும்மா இருக்க விடுவதில்லை ஏதாவதொரு ஆசையை உண்டாக்கி எங்காவது ஒரு சிக்கலில் மாட்டி விடுகிறது. எண்ணங்களை உருவாக்கி என்ன வேகத்தில் செயல்படுகிறது என்றே தெரியாமல் தாவி திரிகிறது.

எங்கள் மனதில் ஒவ்வொரு எண்ணங்களும் எப்படி உருவாகிறது இதற்கு எங்கள் ஐம்புலன்களும்தான் காரணம். இந்த ஐம்புலன்களும் உள்வாங்கும் ஒவ்வொன்றுக்கும் ஏற்றது போலான எண்ணங்களையும் அதற்கு தொடர்புடைய ஏற்கெனவே எங்கள்  ஆழ் மனதில் பதிந்திருப்பதை நினைவுக்கு கொண்டு வருகிறது. எங்களுக்கு தெரியாமலே எங்கள் வாய் ஒரு பாடலை பாடும் எதற்கு திடீரென இந்த பாட்டு நினைவுக்கு வந்தது என தேடி பார்த்தல் எங்கோ இந்த பாட்டு எங்கள் காதுக்கு மெதுவாக கேட்டிருக்கும். இதில் இருந்து ஒரு விடயத்தை நாங்கள் புரிந்துகொள்ள முடியும் ஒரு விடயத்தை நாங்கள் நினைவு வைதிருக்கவேண்டுமாயின் ஏற்கெனவே எங்கள் மனதில் பதிந்திருக்கும் ஒரு விடயத்துடன் தொடர்பு படுத்தி நினைவு வைத்துகொண்டால் எப்போதும் மறக்காது என்பதுவே.புதிதாக  ஒருவருடைய பிறந்த நாளை நினைவில் வைத்துகொள்ள விரும்பும் நாங்கள் அந்த திகதியை வெளிமனத்தில் பல தடவை மீட்பதற்கு பதிலாக ஏற்கெனவே  நினைவில் இருக்கும் ஒருவருடைய பிறந்த நாளுக்கு இரண்டு நாளுக்கு பின் என பதிந்து விட்டால் அது மறக்காது. இதில் இருந்து இன்னொரு விடயத்தையும் நாங்கள் புரிந்துகொள்ள முடியும் எங்கோ ஒலித்த பாடல் மெதுவாக கேட்டதும் அதுக்கான விளைவை ஆழ்மனம் காட்டுகிறது ஒருவருக்கு ஒரு சோகமான சம்பவம் ஒரு இடத்தில் நடந்தால் அவர் அதில் இருந்து வெளிவராமல் அந்த சம்பவம் அவர் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்திகொண்டிருந்தால் அவரை அந்த சூழ்நிலையில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றுதல் சிறப்பு இல்லை என்றால் அவர் காணும் கேட்கும் எல்லா விடயங்களையும் எங்களை அறியாமல் ஆழ்மனம் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கும். எங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்கள் நல்லதாக இருந்தால் அது சம்பந்தமானவற்றால் எங்கள் மனதில் நல்ல மகிழ்ச்சியானவையே நினைவுக்கு வரும் அதுவே மாறாக சோகமும், துன்பங்கள் நிறைந்த ,கேவலமான சம்பவங்களாக இருந்தால் அது சம்பந்தமானவை எங்கள் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். எனவே எங்கள் மனதில் நல்லவற்றை பதிய விரும்பினால் எங்களை சுற்றி எப்போதும் நல்ல சூழலை உருவாக்கி கொள்ளவேண்டும்.

ஒரு சைக்கிளை அல்லது ஒரு வாகனத்தை முதல் முறை பழகும் போது எவ்வளவு கவனத்துடன் பழக்குகிறோம் முழு சிந்தனையும் வீதியில் இருந்தாலும் பல தவறுகளை செய்துதான் விழுந்து எழும்பி பழகுகிறோம் ஆனால் அதுவே பழகி அதன் முறை எங்கள் ஆழ்மனதில் பதிந்துவிட்டால் அதன் பின் எத்தனையோ சிந்தனைகளின் மத்தியில் அந்த வாகனத்தை எங்களால் சரியாக ஓட்ட முடிகிறது இது ஆழ்மனதினால் சாத்தியமாயிற்று. சில நேரத்தில் ஏதோ சிந்தனையில் வாகனத்தை ஓடிகொண்டே போவோம் நாங்கள் போக வேண்டிய இடம் வேறாக இருக்கும் ஆனால் வாகனம் வழமையாக நாங்கள் போகும் ஒரு இடம் நோக்கி போய்கொண்டிருக்கும் நாங்கள் திடீரென சிந்தனையில் இருந்து விலகி பார்க்கும் போது இதை உணர்ந்துகொள்ளலாம். இதுபோலவே எங்கள் வாழ்கையில் பல விடயங்களுக்கு கட்டுபாட்டுடன் ஆரம்பத்திலேயே பழகி கொண்டால் அதுவே ஆழ்மனதில் பதிந்துவிட்டால் அதன் பின் எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் ஆழ்மனம் அதையே செய்யதுண்டும். இதில் இருந்து நாங்கள் புரிந்துகொள்ளவேண்டியது சிறு வயதிலேயே பல நல்ல பழக்கங்களை கட்டுபாட்டுடன் பழக்கி ஆழ்மனதில் பதியவைத்துவிட்டால் அது அவர்கள் வாழ்நாள்முழுவதும் அவர்கள் சிறப்பாக இருக்க உதவும். 

தவறான விடயங்களை முதல்தடவை செய்யும் போது தவறாக தோன்றும் அதன் பின் அது ஆழ்மனதில் பதிந்தபின் அது பிழையான விடயமாக தெரிவதில்லை. முதல் தடவை தவறு செய்யும் போதே திருத்திக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அதன்பின் அதை மாற்றிகொள்வது மிககடினமனதாகும். வெளிமனம் இது தவறு என்று சொன்னாலும் அதை ஏற்றுகொள்ளாது ஆழ்மனம் அப்படி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்தாலும் சிலநாட்களில் ஆழ்மனம் வெளிமனத்தை அடக்கிவிடும் இன்று மட்டும் செய்யலாம் நாளையில் இருந்து தவிர்த்துவிடலாம் என்று சமாதானமும் சொல்லும். இதுபோல ஆழ்மன அடிமைத்தனம்தான் போதை ,குடி,புகை பழக்கங்களுக்கு அடிமையாகியவர்களின் நிலை, இதில் இருந்து விடுபடுவது கடினமாக இருக்கிறது எனவே கட்டுபாடு ரொம்ப முக்கியம் என முன்னவர்கள் சொல்வது  இதுக்காகத்தான். எனவே தப்புகள் முதல் தடவை செய்யும் போதே தடுத்து விடுங்கள். பழகியபின் ஆழ்மனதை வெல்வது சாத்தியமில்லை என்று சொல்லிவிட முடியாது மிக கடினம்.

சில காதலர்களை பார்த்திருப்போம் அதில் ஒருவர் மிக அழகாக இருப்பார் மற்றவர் அசிங்கமாக இருப்பார் அவர்களுக்குள் அது பெரிய விடயமாக இருக்காது பார்க்கும் எங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இங்கு நடந்தது என்ன அவர்கள் பழகும் போது அவர்களுக்குள் காதல் இருந்திருக்காது ஆனால் அவர்கள் சில காலம்  பழகும் போது ஒருவர் ஆழ்மனதில் மற்றவர் பதிந்துவிடுவார் அதன் பின் விலகுவது கடினமாக இருக்கும். இவர்களை கேட்டால் அவரை விரும்புவதற்கு காரணம் சொல்ல முடியாமல் இருக்கும் சொல்லவேண்டும் என்பதுக்காக சில காரணங்களை சொல்லலாம் ஆனால் உண்மை ஆழ்மனம் தான். ஆனால் இவர்களால் மற்றவரை விட்டு விலகமுடியாமல் இருப்பதுதான் காரணம். நண்பர்களே உங்களுக்கு ஒருவர் மீது காதலா? முதலில்  அவர்கள் ஆழ்மனதில் பதியும் வரை நன்றாக பழகுங்கள் நல்லவிதத்தில் பதியவேண்டுமாயின் அவர்கள் மனம் விரும்பும் விதத்தில் பழகி ஆழ்மனதில் உங்களை பதியவையுங்கள். அதன் பின் அவர்கள் உங்களை விட்டு பிரிய நினைக்கும் போது அவர்கள் உங்களை உணர்வார்கள்.
எங்களை போல பசங்களை பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்........