சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

காதலின் குழந்தை கல்லறை...!!!


ஏறி வந்த வாழ்க்கை படிகட்டுகளில் 

ரசித்து புரிந்தவை சில
பிடிக்காமல் விலகி வந்தவை சில 
புரியாமல் கடந்து வந்தவை பல 
ஒரு புதிர்-விடை தேடி 
ஓடி முடிவதற்குள் 
அடுத்தடுத்த கேள்விகள்
வாழ்கையின் அர்தத்தை
சிந்திக்க நேரமற்று
ஓட்டம் மட்டும் முடிவாக
இதயவோட்டம் நிக்கும்வரை...!!!

ஆயிரம் ஆசைகள்
வந்து போயின
அதில் அடைந்தது என்ன
இழந்தது என்ன
அர்த்தமற்ற சிந்தனை மட்டும்தான்
நிரந்தரமாக ஆரம்பித்த இடத்திலேயே
விடைகள் மட்டும் சூன்யமாக ...!!!

கடந்து வந்த காலத்தில்
சூழ்ந்துகொண்ட பிரச்சனைகளில்
ஓடி ஒளிந்ததனால்
கிடைதவையெல்லாம் அனுபவம்
என்ற வீராப்பில்
உன் வயது என் அனுபவம் என்று
அடுத்தவர்களிடம் வாய்சுனாமி
அடித்தவரெல்லாம்
வாழ்க்கையை முகம் கொடுக்கமுடியாமல்
மூச்சு முட்டி மூழ்கி இறந்தவர்களே
பிணங்கள் மட்டும் பேசிக்கொண்டு திரிகிறது...!!!

வயதல்ல அனுபவம்
முன்னின்று முகம் கொடுத்து
முயற்சி செய்ததில்
கிடைத்த தோல்விகள்-அறிவுகள்
அதன்பால் கொண்ட
வெற்றிகள் தான் அனுபவம் ...!!!

நெற்றிகாசை எதிர்பார்த்து
எரியாமல் காத்திருக்கும் பிணம் வரை
பணத்தின் மேல் கொண்ட மோகம் தீருவதில்லை...!!!

மனங்களை நோகடித்தேனும்
பணங்களை அடையலாம் தவறில்லை
பணங்களை இழந்து மனங்களை ஜெயிப்பதில்
உடன்பாடில்லா புதுமை விதிகள்
மனிதத்தை வளர்ப்பதற்காக என்று
நமக்குள் சொல்லிகொள்கிறோம் ...!!!

பருவத்தில் வரும் காதல் போல்
ஈர்பில் வருவது இவையெல்லாம்
உண்மை காதல் மலர்ந்து
அவர்கள் குழந்தை பிரசவிக்கும்வரை
உண்மைபோல் தோன்றும் இவையனைத்தும்
பொய்யாக்கும் பிறந்த குழந்தை...!!!

எதுதான் உண்மை காதல்
மண்ணுக்கு எங்கள் மேல் இருக்கும் காதல்
அவர்கள் குழந்தைதான் எது
கல்லறை.

-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

6 comments:

 1. சில சாட்டையடி உண்மை வரிகள்...

  "காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே"

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வந்து என்னை ஊக்க படுத்தும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே..

   Delete
 2. வணக்கம் சகோ!...

  உங்களை இன்று வலைச்சரத்தில் கண்டுகொண்டு இங்கு வந்தேன்.
  அருமையான சிந்தனை. அழகிய கவிதை.
  ஆழ்ந்த வரிகள் மனதை ஏதோ செய்கிறது...
  வாழ்த்துக்கள்!

  மரணத்தின் பின்னும் தொடருவது
  மண்ணில் கொண்ட காதல்
  மரித்தபின்னும் அடங்குவதும்
  அவள் மடியில்தானே.....

  ReplyDelete
  Replies
  1. எனது பக்கத்துக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.. உங்கள் கருத்தும் அழகாக இருக்கிறது..மனதை நெகிழ வைக்கிறது..

   Delete
 3. //மனங்களை நோகடித்தேனும்
  பணங்களை அடையலாம் தவறில்லை
  பணங்களை இழந்து மனங்களை ஜெயிப்பதில்
  உடன்பாடில்லா புதுமை விதிகள்
  மனிதத்தை வளர்ப்பதற்காக என்று
  நமக்குள் சொல்லிகொள்கிறோம் .//அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள்...

   Delete