சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

முயற்சியும் இல்லை தோல்வியும் இல்லை !!!


தேவைகள் எல்லாம் காலடியில் வந்தால் 

தேடல்கள் இல்லை தடைகள் இல்லை 
முயற்சியும் இல்லை தோல்வியும் இல்லை 
சாதனையுமில்லை வெற்றியுமில்லை 
என்ன இருந்திட போகிறது இந்த 
உப்பில்லாத உணவுபோலான 
சோம்பேறி வாழ்கையில்
நானாகவே கெட்டு அறிந்தேன்
நால்வர் புறக்கணிப்பில் புரிந்தேன்
எத்தனை வயதாநாலும் புரியாத
கோடிகள் பல கொட்டி கொடுத்தாலும்
கிடைத்திடா ஞானத் தத்துவத்தை
கோடிகள் மீதான ஆசையின் பாடத்தில்
பட்டறிந்தேன் !!!

8 comments:

 1. தமிழ்மணத்தில் ஓட்டுப்போட முடியவில்லை ஏன்னென்று தெரியவில்லை

  சரிசெய்யவும்

  ReplyDelete
  Replies
  1. தெரிய படுத்தியமைக்கு நன்றி.. ஆனால் எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை தேடி பார்க்கிறேன்..

   Delete
 2. நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...

  முதலில் தமிழ்மணம் திரட்டில் சென்று தளத்தை இணைத்தீர்களா...? பிறகு ஒரு தளத்தைப்பற்றி சிறு குறிப்பும் அவர்களுக்கு அனுப்பவும்... அவர்களிடமிருந்து approval வந்த பின் உங்கள் தளத்தை நீங்களே முதலில் summit செய்ய வேண்டும்...

  நன்றி...

  dindiguldhanabalan@yahoo.com

  ReplyDelete
 3. நன்றி நண்பரே,,,

  முன்பு எனது பதிவுகள் தானாகவே தமிழ்மணத்தில் இணையும் இப்போது நான் இணைக்கும் வரை இணையாது...

  இப்போது ஒருவர் ஓட்டு போட்டிருக்கிறார் வேலை செய்கிறது என நினைக்கிறேன் என்னால் பார்க்க முடியவில்லை ..

  ReplyDelete
 4. கவிதை சிறப்பாக உள்ளது ... பாராட்டுக்கள் .

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே..

   Delete