சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

அரை நிர்வாணப் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட முஸ்லீம் பெண்ணுக்காக அரை நிர்வாண போராட்டம் (18+)


முஸ்லீம் பெண்ணுக்கு ஆதரவாக அரை நிர்வாண போராட்டம்


துனிசியா நாட்டில் வாழும் அமீனா என்ற 19 வயது பருவப் பெண், தனது அரை நிர்வாணப் படத்தை தனது முகநூலில் வெளியிட்டார். "எனது உடல் எனக்குரியது, யாரையும் மகிமைப் படுத்துவதற்கு அல்ல." என்று அரபி மொழி வாசகங்களை தனது மார்பில் எழுதி வைத்திருந்தார். அந்தப் படம் வெளியானவுடன், நாலாபக்கமும் இருந்து மதவாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அமீனாவை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று சில இஸ்லாமிய மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயமுறுத்தல்களால், அமீனா தலைமறைவாக வாழ்வதாகவும், அவரது பெற்றோர் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பல வதந்திகள் பரவின. இதே நேரம், உக்ரைனிய அரை நிர்வாண போராளிகளான Femen அமைப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று, 4 ஏப்ரல், உலகம் முழுவதும் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தும் தினமாக அறிவித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக, Femen அமைப்பை சேர்ந்த ஐந்து பெண்கள், இன்று பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். புருசெல்ஸ் நகரில் உள்ள, பெரிய மசூதிக்கு முன்னால் நடந்த அரை நிர்வாணப் போராட்டம், எந்த வித அசம்பாவிதமும் இன்றி முடிவுக்கு வந்துள்ளது. இன்று வேறு பல ஐரோப்பிய நகரங்களிலும், இதே போன்ற போராட்டங்கள் நடந்துள்ளன. அமீனாவுக்கு ஆதரவாக, உலகம் முழுவதிலும் இருந்து பல பெண்கள், இணையத்தில் தமது படங்களை பதிவேற்றி வருகின்றனர். இணையத்தில் அமீனாவுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டையும் நடக்கின்றது. இதே நேரம், Femen இணையத்தளம் தாக்குதலுக்குள்ளாகி முடக்கப் பட்டுள்ளது.
http://www.euronews.com/2013/04/04/femen-targets-islam-in-bare-breast-brussels-protest/


0 comments:

Post a Comment