சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

சூரியன் மேல் பழி போடாத குந்திகள்



நாகரீகம் இங்கே கூட கூட 

உடைகள் அங்கே குறைகின்றன 
புதிய உடையை கிழித்து அணியும் 
புதுமை புரட்சியும் நடக்கிறதங்கே 
இன்றைய கண்ணகிகள் போதைக்காக 
கற்பிழக்கும் கண்ணன் அழகிகளிவர்கள் 
கலியுக கர்ணன்களை உருவாக்கும்
செல்வந்த சுகபோக வாரிசிவர்கள்
சூரியன் மேல் பழி போடாத குந்திகள்
சுகம் தேடி அலையும் இந்திரலோகமிது

மாற்ற உடையின்றி ஒருசமூகமிங்கே
மழைக்கு ஒதுங்க இடமின்றி நனையுது
கிழிந்த உடையை தைத்து தைத்து உடுத்தி
கற்பு காக்கும் இவர்கள் தீண்டத்தகாதவரிங்கே
சுருங்கிய வயிற்றை தண்ணீர் விட்டு நிரப்பும்
சுந்தர மதன காம சுகபோகத்தவர் எச்சங்களிவர்கள்
ஒவ்வொரு நிமிடத்தையும் நரக யுகமாக கடக்கும்
கடவுள் குழந்தைகள் இவர்களும் மனிதர்கள்தான்!!!

4 comments:

  1. இதைத்தான் நாகரீகம் என்கிறது இந்த கேடு கெட்ட சமூகம்...

    ReplyDelete
    Replies
    1. இனி இது மாறுமா? மாற்ற முடியுமா?

      Delete
  2. //நாகரீகம் இங்கே கூட கூட
    உடைகள் அங்கே குறைகின்றன //

    வாஸ்தவம் தான் ....

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே..

      Delete