சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

உலகிற்கு அம்மா உழவன் என்பேன் !




பசி இல்லாததுபோல
பாசாங்கு செய்வாள்
பிள்ளையின் பசி போக்க
பட்டினியாய் கிடப்பாள்

கடவுள் இல்லை என்று
எப்போதும் நான் சொன்னதில்லை
அம்மா உன் கருணை கண்டதால்

தானும் தன் குடும்பமும்
வறுமையில் தவிக்க
பூமியை செழுமையாக்கி
உலகத்தவர்கள் யாவரும்
பசியாற உழைக்கும்
உழவனும் தாயும் ஒன்றே

எனக்கு இறைவன் அம்மா என்றால்
உலகிற்கு அம்மா உழவன் என்பேன்
உழவனே உன் தியாகம் உணர்ந்ததால்
உள்ளத்தில் இன்னமும் நன்றி உள்ளதால்!!!


-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans

11 comments:

  1. நல்ல ஓப்பிடல் தாயும் உழவரும் சிறப்புங்க.

    ReplyDelete
  2. சிறப்பான சிந்தனை. அருமை. வாழ்த்துக்கள் சகோதரரே!

    விளைகின்ற பூமியும் விதைக்கின்ற உழவனும்
    விந்தையான உறவேதான் வேறேதும் நிகரில்லை
    வந்தனை செய்யுமும் வழுவில்லா மனமது
    எந்தனின் எண்ணத்தில் ஏற்றம்மிகக் கொள்கிறதே...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  3. அருமையான ஒப்பீடு
    ஆழமான சிந்தனைக்கும்
    அருமையான பதிவிற்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடர் கருத்துக்கு நன்றி நண்பரே..

      Delete
  4. இரண்டு சிறப்புகளையும் ஒப்பிட்டதும் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி..

      Delete
  5. எனக்கு இறைவன் அம்மா என்றால்
    உலகிற்கு அம்மா உழவன் என்பேன்//
    உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே..

      Delete