சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
கடவுளின் தூதுவன் நான் சாதியில் உயர்ந்தவன் என் அங்கங்கள் எல்லாம் அருள் பொழியும் தங்கங்கள்
என்னுடல் பட்டால் அடையலாம்
பூலோகத்தின் பிறவிப்பயன்..!!!
இவர் பாதத்தால் மிதிக்கும் போதே இத்தனை அருள் என்றால் இவர்...........
-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans
என்ன கொடுமை இது...!
ReplyDeleteஇன்னும் பல ரஞ்சிதாக்கள் காத்திருக்கிறார்கள் நித்தியானந்தாக்களுக்காக..
Deleteஎன்று மடியுமோ இவர்களின் அடிமைத்தனத்தின் மீதான மோகம்?
ReplyDeleteமனிதன் மாறி மரத்தில் ஏறிவிட்டான் ஒரு பக்கம்.
மண்ணை கவ்வுகிறார்கள் இங்கு கடவுள் எனும் மாயத்திற்கு.
பாவம் பெரியார். நல்ல வேளை, இந்த அநியாயங்களை பார்த்தால் வந்த அதே வேகத்தில் தன் கல்லறைக்குள் திரும்பி ஓடி ஓளிந்து கொள்வார்.
இன்னும் இதுபோன்று எங்களுக்கு தெரியாமல் எதனை எதனை பாமர மக்கள் இப்படி சுரண்டபடுகிறார்களோ தெரியவில்லை......
Deleteஇவர்கள் பாதத்தில் கிடப்பது
ReplyDeleteமூடத்தனம் மட்டுமா ?
படமும் அதற்கான கவிதையும் அருமை
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..
Deleteஎன்ன கொடுமை..
ReplyDeleteமதங்கள் எடுத்திருக்கும் விச்வரூமமிது ..
Deleteஇன்னும் நம்புறாங்க என்ன சொல்ல
ReplyDeleteஇன்னமும் அம்மா பகவான் அப்படி இப்படி ஏமாற்று பகவான்கள் மாயையில் தான் கடவுள் சன்னதியை விட கூட்டமும் கல்லாவும் கலகலக்குது ..
Delete