சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

எனக்குள் எட்டி பார்த்தேன் ஏங்கித்தான் போனேன் ...!!!



என்னை தவிர எல்லோரும்
ஏன் இப்படி இருக்கிறார்கள்!!!

அவனை  பார்த்தேன்
ஆயிரம்  அழுக்கு
இவனை பார்த்தேன் 
எத்தனை இழுக்கு!!!

நித்தமும் இவர்களுக்கு
இலவச ஆலோசனை 
அள்ளி அள்ளி கொடுத்தேன் 
பயனின்றி தலை கவிழ்ந்தேன்
என்ன மனிதர்கள் இவர்களென்று!!!

என்ன செய்வதென தெரியாமல்
எனக்குள் எட்டி பார்த்தேன் 
ஏங்கித்தான் போனேன் 
வெட்கி  சுயநலம் கொண்டேன் 
இனி எனக்கு மட்டுமே 
இலவச ஆலோசனை!!!

சமூகத்தின் மீது எனக்கு எத்தனை அக்கறை
ஏனோ என்மீது இல்லாமல்  போனது
என்னை போல் பலர் இங்கு பொதுநலவாதிகள்!!!

7 comments:

  1. உபதேசத்தை ஊருக்கு மட்டுமே சொல்லி பழகிவிட்டோம்...

    அந்த உபதேசத்தை நாம் என்று கடைபிடிக்கிறோமோ அன்று அனைத்து சரியாகிவிடும்...

    நல்லதொரு கவிதை

    ReplyDelete
    Replies
    1. உடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே..

      Delete
  2. முகபுத்தகத்தில் ஒரு கருத்து பார்த்தேன் அப்போது தோன்றியதுதான் இந்த கவிதை..

    எங்கே தவறு கண்டாலும் அது உன்னிடத்தில் இருந்தால் திருத்திகொள்...

    என்பதுதான்..

    ReplyDelete
  3. நல்ல கவிதை .ஆம் பலரும் தமது முதுகை விட மற்றவர்களின் முதுகை பார்ப்ப
    தே அதிகம் .
    நல்லா சொல்லியிருக்கிறீர்கள் ?
    ஊர மண் வாசனை போலும் புலோலி என எப்படி பெயர் வந்தது தெரியுமா? புலவர்கள் எழுப்பும் ஒலி எப்போதும் கேட்பதால் தான் உங்கள் ஊருக்கு புலோலி என் பெயர் வந்தது .(புலவர் + ஒலி )

    கொஞ்சம் உங்கள் சுற்றம் அயல் ,வாழ்க்கை பற்றியும் எழுதுங்களேன் நண்பரே
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ///ஊர மண் வாசனை போலும் புலோலி என எப்படி பெயர் வந்தது தெரியுமா? புலவர்கள் எழுப்பும் ஒலி எப்போதும் கேட்பதால் தான் உங்கள் ஊருக்கு புலோலி என் பெயர் வந்தது .(புலவர் + ஒலி )///

      ம்ம் அறிந்திருக்கிறேன் புலவர் ஒலியறா புலோலி என்பார்கள்.

      உங்கள் மனதை நெகிழவைக்கும் கருத்துக்கு நன்றி.....

      ///கொஞ்சம் உங்கள் சுற்றம் அயல் ,வாழ்க்கை பற்றியும் எழுதுங்களேன் நண்பரே//

      முயற்சி செய்கிறேன்..வாழ்த்துக்கு நன்றி.

      Delete
  4. நம்மை நாம் ஒப்பிட்டுக் கொண்டால் எவ்வித பிரச்சனையுமில்லை...

    நேரம் கிடைப்பின் வாசிக்கவும் : மனிதனின் பிரச்சனைக்கு காரணமான குணம் எது ?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சுயவிமர்சனம் போல் ஒரு நல்ல ஆசானை நான் இதுவரை கண்டதில்லை...

      கண்டிப்பாக வாசிக்கிறேன் நண்பரே,,

      நன்றி..

      Delete