கடவுளின் உடைமைகள்
களவாடபடாமலிருக்க
கோவில்களில் காவலுக்கு
காவலர்களும் மேலும்
கதவுகளும் மூட படுகின்றன
என் உடமைகளை கடவுள் காக்க
என் உழைப்பில் கடவுளுக்கும்
பூசாரிக்கும் காணிக்கைகள்
கொடுப்பவன் கடவுளா
அவன் பெயர் சொல்லி எடுப்பவன் கடவுளா
புரியவில்லை எனக்கு
கடவுள் என்றால் என்னவென்று!!!
வாசலில் ஒரு வேளை உணவுக்காக
பலபேர் பசியோடு காத்திருக்க
கை கூப்பி கேட்டும் கொடுக்காமல்
கேட்காத பசியற்ற கடவுளர்க்கு
உள்வந்து அள்ளி அள்ளி கொடுப்போம்
நாங்கள் பக்திவான் என்ற பெருமையோடு!!!
பால் தேன் படையல் என்று பல
உண்ணாத கடவுளர்க்கு நித்தமும்
வேளை தவறாமல் கொடுபோமே அன்றி
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டிடோம்!!!
பட்டினி விதி என்று நான் படைத்திட
பசி உணராது புசிக்க கொடுத்தது யாரென்று
படைத்தவன் கோவம் போசிக்கிடுமென்று
பக்குவமாய் காரணம் சொல்லி ஆறறிவால்
பாரினிலே தப்பித்தும் கொள்வோம் !!!
-புலோலியூர் கரன்-
http://www.facebook.com/sabaharans
மனதை பிழியும் ஆக்கம். படங்கள் அதைவிட கொடுமையாக உள்ளன.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி புலோலியூர் கரன். தேவை நமக்கு மன பலம்.
உங்கள் உணர்வு பூர்வமான கருத்தக்கு நன்றி தோழரே..
Deleteநல்ல விடயம்..
ReplyDeleteஇது உண்மையின் தரிசனம்...
இந்த விடயம் பாமர மக்களுக்கும் சென்றடைய வேண்டும்...
எனவே பத்திரியைகளில் பிரசுரிப்பது நல்ல விடயம்..
அதை செய்து விட்டீர்களா..?
இல்லை என்றால் செய்ய முயற்சியுங்கள்... நன்றி
நண்பரே உங்கள் கருத்துக்கு நன்றி.. முயற்சி செய்கிறேன்.. நன்றி..
Deleteசும்மா சொல்லக்கூடாது.கவிதைகளூடு வெளிப்படும் உங்கள் சிந்தனைகள் என்னை மிகஙுவும் கவர்கின்றன
ReplyDeleteநன்றி நண்பரே ..
Delete