சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

இயற்கையிடம் கற்க மறந்ததை!!!

ஒளி நோக்கி உயர்ந்திடும் மரமே 
உன் வளைவுகள்உரைக்கிறது 
உணவுக்கான உன் உழைப்பை 
உன்னை பார்த்தேனும் நான் 
உணரவில்லையே 
உழைத்து உயர்ந்திடும் உண்மையை
பட்டு கெட்டு அறிந்தபின்
பார்த்து வியக்கிறேன்
இயற்கையிடம் கற்க
மறந்ததை!!!

-புலோலியூர் கரன்-

என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

0 comments:

Post a Comment