வீசும் தென்றல் காற்று
கிச்சு கிச்சு மூட்ட
கூச்சம் தாங்காமல்
தென்னம் கீற்றுக்கள்
நளினம் காட்டி நெளிய
பூவரசம் மரங்கள்
பீபீ செய்ய தூண்டி
இலைகள் காட்டி நிக்க
குளிக்க வந்த புற்கள் சில
விட்டு போக மனமின்றி
ஊறி கிடக்க
தண்ணீரில் தன் அழகை
எட்டி பார்த்து ரசிக்கும்
வளைந்த மரங்கள்
என் ரசனையை தட்டி
எழுப்ப
இத்தனை அழகினை
மொத்தமாக பார்த்திராத
என்
மயங்கிய மனமோ
கொட்டி கிடக்கும் தமிழை
ஒட்டி பார்க்க தூண்ட
எத்தனை வித மரங்கள்
இத்தனை ஒற்றுமையாய்
ஏதோ ஒன்றை சொல்லி போக
இரு பக்கமும் சமமாக
போடும் துடுப்பில் நகரும்
படகின் தத்துவத்தையும்
புரிந்தவனாக நகர்கிறேன்
ரசிகனாக நான் படகினில் ...
கிச்சு கிச்சு மூட்ட
கூச்சம் தாங்காமல்
தென்னம் கீற்றுக்கள்
நளினம் காட்டி நெளிய
பூவரசம் மரங்கள்
பீபீ செய்ய தூண்டி
இலைகள் காட்டி நிக்க
குளிக்க வந்த புற்கள் சில
விட்டு போக மனமின்றி
ஊறி கிடக்க
தண்ணீரில் தன் அழகை
எட்டி பார்த்து ரசிக்கும்
வளைந்த மரங்கள்
என் ரசனையை தட்டி
எழுப்ப
இத்தனை அழகினை
மொத்தமாக பார்த்திராத
என்
மயங்கிய மனமோ
கொட்டி கிடக்கும் தமிழை
ஒட்டி பார்க்க தூண்ட
எத்தனை வித மரங்கள்
இத்தனை ஒற்றுமையாய்
ஏதோ ஒன்றை சொல்லி போக
இரு பக்கமும் சமமாக
போடும் துடுப்பில் நகரும்
படகின் தத்துவத்தையும்
புரிந்தவனாக நகர்கிறேன்
ரசிகனாக நான் படகினில் ...
பலவற்றை சொல்கிறது வரிகள்...
ReplyDeleteதொடர் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துக்கு நன்றி..
ReplyDelete