சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
கர்ப்பகிரகத்தில் கடவுளை கண்டர் யார் கண்டதில்லை இதுவரை நான் கர்ப்பபையில் எம்மை சுமந்த கடவுள் உன்னை இல்லையென்று கதைத்தவர் யார் எவருமில்லை
உன் கருவறைதான் எமக்கு
உலகினில் முதல் உறை
உயிர் கொடுத்து உருவளர்த்த
உயிருள்ள உண்மை கடவுள் நீ
உயிர் கொடுத்த உன்னை
உருக்குலைய விட்டுவிட்ட
உறவின்றி தவிக்க வைத்து
உலக இன்பத்தில் உருள
உன் பிள்ளை சென்றுவிட்டான்
கருவறையை முதலறையாக்கி
உயிர் கொடுத்தாய்
இறுதியில் இப்படி ஓர் அறையில்
தனியாக தவிக்கவிட்டு
உன் உயிரை எடுக்கத்தானா?!!!
-புலோலியூர் கரன்-
பிள்ளைகள் அல்ல...
ReplyDeleteசமூகத்தின் தொல்லைகள்...
:)
Deleteஉன் கருவறைதான் எமக்கு
ReplyDeleteஉலகினில் முதல் உறை//
அன்னையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..
Delete