சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

15 பேரை உயிருடன் கொடூரமாக எரிக்கும் காணொளி

எச்சரிக்கை :இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நன்று.........

கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது. கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது. கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய கால ஐரோப்பாவில் நிலவிய "சூனியக்காரிகள் எரிப்பு வன்முறை", இன்று ஆப்பிரிக்க கிறிஸ்தவர்களிடையே பரவி வருகின்றது. மதம் வளர்க்கும் மூட நம்பிக்கைகளின் தீய விளைவுகளில் ஒன்று இது. அதிர்ச்சிதரும் "சூனியக்காரிகள் எரிப்பு" வீடியோவை இங்கே இணைத்துள்ளேன்.

நன்றி கலையகம் .

2 comments:

  1. இப்படியும் கொடுமையா? பாவம் இதையும் படம் பிடித்து வெளியிட்டுள்ள தொலைகாட்சி நிறுவனத்தின் டி.ஆர்.பி மட்டுமே அதிகமாயிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இப்போதெல்லாம் உலகத்தில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது இப்படி பட்ட உலகத்திலேயா நாங்கள் இருக்கிறோம் என்ற வெறுப்பு வருகிறது...

      கருத்துக்கு நன்றி நண்பரே..

      Delete