சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers
அமுதசுரபி இறுதி முத்தம்
கார்மேக நதிக் குழல் நடுவே
கரம் புதைத்து அருகசைத்து
செவ்வதனம் கயல்மூடி
இதழ் பதிக்க நாணியவள்
நாற்குணமும் பதைபதைக்க
கலமனைத்தும் சிலுசிலுர்க
காலமதன் கைகொடுக்க
குணமனைத்தும் மறைந்திடவே
தையலவள் ஏங்கிநின்றால்
பருவமதை உணர்ந்திடவே
பக்குவமாய் அறிந்திடவே
பலகால ஏக்கங்களை
மெய்யிரண்டும் ஓருயிராக
காமனவன் தடம் பதிக்க
அவன்கொடுத்த இறுதி முத்தம்
அமுதசுரபி இனிமையல்லோ!!!
-புலோலியூர் கரன்-
http://www.facebook.com/sabaharans
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment