சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

உள்ளம் கேட்கிறது அந்த அழகிய நாட்களை


பட்டாம்பூச்சிகள் போல 
மனம் பல வண்ணங்களில் 
எங்கெங்கோ பறந்து திரிந்தது 
எந்த சுமையுமில்லை 
அறியும் பக்குவமுமில்லை
சுகந்திரகாலமது

வெயிலுக்கு பயந்ததுமில்லை
மழைக்கு ஒதுங்கியதுமில்லை
இயற்கையோடு சங்கமித்த
சந்தோஷ காலமது

இலந்தை,விளா முட்கள்
குத்தி வலித்ததுமிலை
மா, புளி புளித்ததுமில்லை
ஒரு மரத்தையும் விட்டதில்லை
எந்த சத்து குறையுமில்லை
ஆரோக்கியகாலமது

விளையாடாத விளையாட்டுமில்லை
விழுந்தெழும்பாத இடங்களுமில்லை
வியர்க்காத நாட்களே இல்லை
சோர்த்து திரிந்ததுமில்லை
துடிப்பான காலமது

உள்ளம் கெடக்குதே
அந்த அழகிய நாட்களை
நினைக்காத நாட்களே இல்லை
மீண்டும் இது கிடைபதாயுமில்லை
ஏக்க காலமிது !!!

0 comments:

Post a Comment