கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு

ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)

மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)

தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

உமாதேவி உடலில் இத்தனை அழுக்கா...!!!


உலகை காக்கும் உமையவள் 

உடல்தனில் அத்தனை அழுக்கா? 

உருட்டி உருவம் செய்து 
உயிர் கொடுக்கும் அற்புத 
அறிவியல் கடவுளர் உலகினில் 
பார்வதி குளிக்க காவலர் ஏனோ?

யாரிடமிருந்து காத்திட சொல்லி
குளித்திடும் இடமதில்
உயிர் கொடுத்த உருவத்தினை
வாசலின் காவல் வைத்தார்?

அவனன்றி அணுவுமசையாத
அற்புத சக்திவான் சிவன் கூட
தன் பிள்ளை இவனென
அறிந்திடா மாயமென்ன
பிள்ளை"யார்" என கேட்டது சரியா?

ஒழுக்கமில்லை எனக்கு....



உதயனின் கள்ள காதலால் 

பூமியை பிரிந்தவள் நான் 
என்பிரிவால் வறண்டது பூமி
காதல் பயனத்தினிடையில் 
முகிலவன் மோகத்தால் 
அவள் அணைப்பில் சிலநேரம்
உரசிடும் முகில்களின்
உக்கிர மோதலில் சிந்திய
உதிரமாய் பார்தனில்
வந்து மீண்டும் வீழ்ந்தேன்
துள்ளி குதித்து மகிழ்கிறேன்
மழைதுளியாக!!!
அடுத்த பயணத்திற்காக
நீர்த்துளியாக!!!

ராவணன் மகள் சீதை



தன் நாட்டு பெண்ணெல்லாம் 

தனக்கு தாரமென்றால் 
தசரதன் மகன் ராமனுக்கு 
அந்நாட்டில் இருப்பதெல்லாம் 
அன்னையும் அக்கா தங்கைகளும்
தந்தை தசரதன் சபலத்தால் 
தனையன் இவன் ரசிக்க தையலில்லை
ராவணன் மகள் தவிர்ந்த பெண்ணெல்லாம்
தங்கைகளாக இருக்குமோ என்ற பயத்தால்
ஏகபத்தினி விரதனாகவிருக்க வியப்பென்ன

மகளுடன் சேர்ந்திருந்தால்
அரியணை அழிந்திடுமென
அரண்மனை சொதிடர் சொல் பயந்து
ராவணன் மகள் சீதை தனை
பேழையில் போட்டு விட்டு விட்டான்
ஜனகள் அதை கண்டெடுத்து வளர்த்து வந்தான்


சூழ்சியில் ராமனும் காடு செல்ல
கூடவே சென்ற சீதையும் துன்புற
ஓடி சென்று ராவணனும் தன் மகளை
இலங்காபுரி அழைத்து வந்தான்
கோபம் கொண்ட ராமனோ
சூழ்சிகள் பல செய்து
மாவீரன் ராவணன் தம்பி உதவிகொண்டு
சிவதாசன் உயிர் பறித்துவிட்டான்..!!!



தசரதனுக்கு 63000 மனைவிகளாம் என்ன கொடுமை சார் இது ???
சிவதாசன் -ராவணன்
என்னடா இவன் ராவணன் மகள் சீதை என்கிறான் என்று வியப்பா??

( ராமாயணங்களில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட ராமாயணம் ஒன்றுள்ளது. இது இன்ன பெயர், இன்னாரால் எழுதப்பட்டது என்பன குறிப்பு இல்லாமல் செவிவழிக்கதையாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த ராமாயணத்தின் கதை எப்படி எனில், ராவணனின் மகள் சீதை. சீதை பிறந்த நேரத்தைக் கணித்த ஜோதிடர்கள், சீதையால் லங்கைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால், சிசுவைக் கொன்றுவிடும் படியும் யோசனைக்கூறினர். குழந்தைப் பாசத்தால் கொல்ல மனமில்லாத ராவணன், அந்தசிசுவான சீதையை ஒரு பெட்டியில் வைத்து, தன் நாட்டு எல்லைக்கு அப்பால் விட்டுவரச் செய்தான். அதனை ஜனக மன்னன் கண்டெடுத்து வளர்த்து வந்தான். பின்னர் ராமனை மணம் செய்தப்பிறகு, சீதைக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது. இவை அனைத்தையும் தன் ஒற்றர்கள் மூலம் அவ்வப்போது அறிந்து வந்த ராவணன், தன் மகள் சீதை காட்டில் படும் இன்னல்களைக்கேள்விப்பட்டு வேதைனயடைந்தான். அவளை நல்லமுறையில் வாழவைக்க தன் நகருக்குக் கடத்திவந்தான். தானே அவளது தந்தை என்று ராவணன் கூறியதை சீதை நம்ப மறுத்ததால் போர் ஏற்பட்டது. முடிவில், சீதையின் கால்பட்டதால் லங்கா அழிந்தது. ராவணனும் உயிர் இழந்தான் என்று கதை போக்கு போகிறது...)

கடவுளை காப்பாற்ற ...!!!




பணத்தை பறிகொடுத்த வழிப்போக்கன்
 
நள்ளிரவில் கோவிலுக்கு செற்றான்
கடவுளிடம் முறையிட .......!!!

கோவில் பூட்டபட்டிருந்தது
கடவுள் சிலைகளையும்
அவர் நகைகளையும் காப்பாற்ற..!!!