சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
பசி இல்லாததுபோல
பாசாங்கு செய்வாள்
பிள்ளையின் பசி போக்க
பட்டினியாய் கிடப்பாள்
கடவுள் இல்லை என்று
எப்போதும் நான் சொன்னதில்லை
அம்மா உன் கருணை கண்டதால்
தானும் தன் குடும்பமும்
வறுமையில் தவிக்க
பூமியை செழுமையாக்கி
உலகத்தவர்கள் யாவரும்
பசியாற உழைக்கும்
உழவனும் தாயும் ஒன்றே
எனக்கு இறைவன் அம்மா என்றால்
உலகிற்கு அம்மா உழவன் என்பேன்
உழவனே உன் தியாகம் உணர்ந்ததால்
உள்ளத்தில் இன்னமும் நன்றி உள்ளதால்!!!
-புலோலியூர் கரன்-
https://www.facebook.com/sabaharans
நடமாடும் தெய்வத்தை நடு வீதியில் உதறிவிட்டு கல்லாய் போன உன் நெஞ்சு ஆயிரம் கல்லுக்கு அபிசேகம் தினமும் செய்வது எதுக்காககோவில் பலவேறி வரமென வலி தாங்கி உனை பெற்று
பூமியிலேயே சொர்கத்தை
வரமாக கொடுத்த அன்னைக்கு
நன்றிகடனாக நீ கொடுத்தது
முதியோர் இல்லம் என்கிற நரகத்தை
பூமியும் மனிதரை அழிக்க முயல்கிறது
உன் போன்ற மனிதர்கள் இருப்பதனாலோ....!!!
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans