கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.
கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........
என் வாழ்கையை என்னை வாழவிடு.
உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு
ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)
மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.
TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)
தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.
யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!
மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது
சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-
Followers
ரஜினி நல்ல நடிகனா? தலைவனா?
தாய் மண்ணில் கோடிகளில்
தொழிற்சாலைகள்
உன் மகளுக்கு கோடிகளில்
சீதனம்
வங்கியில் மில்லியன் கோடிகள்
பணமாக
இத்தனை இருந்தும் இறப்பர் செருப்பில்
இந்தியர் மனதில் இடம் பிடிக்கும்
சூட்சுமம் எப்படி அறிந்தாய்
நிஜமாகவே நீ நடிகன்டா
இருப்பதை வாரி வழங்கிவிட்டு
இல்லாமல் இருப்பதை போல
இங்கு பெருமை பேசிக்கொள்ள
இதுபோன்ற புத்தகங்கள் இருக்கும்வரை
உன்னை தலைவன் என போற்றும்
உருப்படாத ரசிகர்கள் இருக்கும்வரை
நீதான் அடுத்த முதலமைச்சர்
கல்விக்கண் திறந்த காமராஜர் கூட |
உன் கருணைக்கு பின்தான்
அவர் உழைக்கிறாய்
கொடுப்பது கொடுக்காதது
அவர் விருப்பம் என்று
யாரோ என்னை ஏசும்
சத்தம் கேட்கிறது
இதுபோன்ற மக்களை வைத்து
போற்றி புகழ்ந்து அசாதாரணமாக
உழைப்பவன் கொடுக்க கூடாதென்றால்
திருடுபவன்தான் கொடுக்கனும்
ஐயாயிரம் சம்பளம்
பெறுபவன் கூட
ஐநூறு கொடுக்கிறான்
கோடிகளில் வாங்குபவன்
உயிரிலும் மேலான ரசிகர்கள்
என்று அடைமொழி சொல்பவன்
கொடுக்கும் விகிதம்தான் என்ன?
நடிகனை நடிகன் என்றால்
யாருக்கும் பிரச்சனை இல்லை
தலைவன் என்கிறீர்களே
அதனால் நாளை இதுபோன்ற
சுயநலவாதிகள் நாடாழ
ஆசை கொள்ளலாம் அதனால்
தோலுரிக்க வேண்டியுள்ளது
இந்த சுயநலவாதிகளை
உணவுக்கு வழியில்லாத
எத்தனையோ பேர்
உன்னை பார்த்து
புகைக்க பழகினர்
உன் உருவத்துக்கு ஏறி
பாலூத்தினர்
உனக்காக வேண்டி
மண் சோறு உண்டனர்
ஆயிரம் ஆன்மிகம் பேசும்
உனக்கு இதை தடுக்க ஏன்
வார்த்தை வரவில்லை
இவை தவறென்று உரைக்க
முடியவில்லை
இவர்கள் அன்பை பார்த்து
வியக்கிறேன் என்று
நாடகமாடினாய்
திரையில் மட்டுமல்ல
அதை விஞ்சிய நடிகன் நீ
நிஜத்தில்!!!!
அரை நிர்வாணப் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட முஸ்லீம் பெண்ணுக்காக அரை நிர்வாண போராட்டம் (18+)
துனிசியா நாட்டில் வாழும் அமீனா என்ற 19 வயது பருவப் பெண், தனது அரை நிர்வாணப் படத்தை தனது முகநூலில் வெளியிட்டார். "எனது உடல் எனக்குரியது, யாரையும் மகிமைப் படுத்துவதற்கு அல்ல." என்று அரபி மொழி வாசகங்களை தனது மார்பில் எழுதி வைத்திருந்தார். அந்தப் படம் வெளியானவுடன், நாலாபக்கமும் இருந்து மதவாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அமீனாவை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று சில இஸ்லாமிய மதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பயமுறுத்தல்களால், அமீனா தலைமறைவாக வாழ்வதாகவும், அவரது பெற்றோர் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் பல வதந்திகள் பரவின. இதே நேரம், உக்ரைனிய அரை நிர்வாண போராளிகளான Femen அமைப்பினர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று, 4 ஏப்ரல், உலகம் முழுவதும் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தும் தினமாக அறிவித்துள்ளனர். அதன் ஒரு கட்டமாக, Femen அமைப்பை சேர்ந்த ஐந்து பெண்கள், இன்று பெல்ஜியத்தில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். புருசெல்ஸ் நகரில் உள்ள, பெரிய மசூதிக்கு முன்னால் நடந்த அரை நிர்வாணப் போராட்டம், எந்த வித அசம்பாவிதமும் இன்றி முடிவுக்கு வந்துள்ளது. இன்று வேறு பல ஐரோப்பிய நகரங்களிலும், இதே போன்ற போராட்டங்கள் நடந்துள்ளன. அமீனாவுக்கு ஆதரவாக, உலகம் முழுவதிலும் இருந்து பல பெண்கள், இணையத்தில் தமது படங்களை பதிவேற்றி வருகின்றனர். இணையத்தில் அமீனாவுக்கு ஆதரவாக கையெழுத்து வேட்டையும் நடக்கின்றது. இதே நேரம், Femen இணையத்தளம் தாக்குதலுக்குள்ளாகி முடக்கப் பட்டுள்ளது.http://www.euronews.com/2013/
என்னை வணங்க வாசலில் சிலர்!!!
என் கஷ்டத்தை தீர்க்க
கோவில் நோக்கிய பயணத்தில்
பூசாரியின் அர்சனை சீட்டுக்கள்
பிச்சைகாரர்களில் தட்டுக்கள்
கடவுளின் உண்டியல்கள்
என்னை நோக்கியே இருக்கின்றன
நான் கடவுளை வணங்கமுன்
என்னை வணங்க வாசலில் சிலர்!!!
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans
ராவணன் மகள் சீதை
தன் நாட்டு பெண்ணெல்லாம்
தனக்கு தாரமென்றால்
தசரதன் மகன் ராமனுக்கு
அந்நாட்டில் இருப்பதெல்லாம்
அன்னையும் அக்கா தங்கைகளும்
தந்தை தசரதன் சபலத்தால்
தனையன் இவன் ரசிக்க தையலில்லை
ராவணன் மகள் தவிர்ந்த பெண்ணெல்லாம்
தங்கைகளாக இருக்குமோ என்ற பயத்தால்
ஏகபத்தினி விரதனாகவிருக்க வியப்பென்ன
மகளுடன் சேர்ந்திருந்தால்
அரியணை அழிந்திடுமென
அரண்மனை சொதிடர் சொல் பயந்து
ராவணன் மகள் சீதை தனை
பேழையில் போட்டு விட்டு விட்டான்
ஜனகள் அதை கண்டெடுத்து வளர்த்து வந்தான்
சூழ்சியில் ராமனும் காடு செல்ல
கூடவே சென்ற சீதையும் துன்புற
ஓடி சென்று ராவணனும் தன் மகளை
இலங்காபுரி அழைத்து வந்தான்
கோபம் கொண்ட ராமனோ
சூழ்சிகள் பல செய்து
மாவீரன் ராவணன் தம்பி உதவிகொண்டு
சிவதாசன் உயிர் பறித்துவிட்டான்..!!!
தசரதனுக்கு 63000 மனைவிகளாம் என்ன கொடுமை சார் இது ???
சிவதாசன் -ராவணன்
என்னடா இவன் ராவணன் மகள் சீதை என்கிறான் என்று வியப்பா??
( ராமாயணங்களில் மாறுபட்ட கதையம்சம் கொண்ட ராமாயணம் ஒன்றுள்ளது. இது இன்ன பெயர், இன்னாரால் எழுதப்பட்டது என்பன குறிப்பு இல்லாமல் செவிவழிக்கதையாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த ராமாயணத்தின் கதை எப்படி எனில், ராவணனின் மகள் சீதை. சீதை பிறந்த நேரத்தைக் கணித்த ஜோதிடர்கள், சீதையால் லங்கைக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால், சிசுவைக் கொன்றுவிடும் படியும் யோசனைக்கூறினர். குழந்தைப் பாசத்தால் கொல்ல மனமில்லாத ராவணன், அந்தசிசுவான சீதையை ஒரு பெட்டியில் வைத்து, தன் நாட்டு எல்லைக்கு அப்பால் விட்டுவரச் செய்தான். அதனை ஜனக மன்னன் கண்டெடுத்து வளர்த்து வந்தான். பின்னர் ராமனை மணம் செய்தப்பிறகு, சீதைக்கு வனவாசம் செல்ல நேர்ந்தது. இவை அனைத்தையும் தன் ஒற்றர்கள் மூலம் அவ்வப்போது அறிந்து வந்த ராவணன், தன் மகள் சீதை காட்டில் படும் இன்னல்களைக்கேள்விப்பட்டு வேதைனயடைந்தான். அவளை நல்லமுறையில் வாழவைக்க தன் நகருக்குக் கடத்திவந்தான். தானே அவளது தந்தை என்று ராவணன் கூறியதை சீதை நம்ப மறுத்ததால் போர் ஏற்பட்டது. முடிவில், சீதையின் கால்பட்டதால் லங்கா அழிந்தது. ராவணனும் உயிர் இழந்தான் என்று கதை போக்கு போகிறது...)
எனக்குள் எட்டி பார்த்தேன் ஏங்கித்தான் போனேன் ...!!!
என்னை தவிர எல்லோரும்
காமம் பற்றி பேசுவோம் (18+)
காமமதில் கலங்கமில்லை
காயமிதன் தேவையதில்
காமனவன் லீலையினால்
கற்பிழந்த கடவுள் பலர்!!!
காமமின்றி பூமியேது
கற்பிக்கத்தான் யாருமில்லை
கண்டபடி கற்றுவிட்டோம்
கண்டதெல்லாம் காமமென்று!!!
மெய்யிரண்டின் தேவைதனை
ஒன்றைஒன்று அறிந்திடனும்
கொடுத்து பெற புரிந்திடனும்
அருவருப்பு பார்த்து நின்றால்
திருப்தியது கிடைப்பதில்லை
கிளியிருக்க குரங்கு தேடும்
காரணமும் இதுவதுவோ
முகம்சுழிக்கா முறை இதைதான்
முந்தானை முடிச்சென்றார்!!!
இன்பமது நிலைத்திருக்க
இடையிடையே இருவருமே
தாழ்வுமனம் தற்பெருமை
அடியோடு அழிந்திடவே
இதைப்பற்றி பேசிடனும்
குறையில்லா வாழ்வுபெற
குறைகளிதை மாற்றிடனும்!!!
வெளிப்படையாய் பேசினால்
ஆயிரம் குறைசொல்லும்
கடைசிவரை ஒளித்தே வைக்கும்
முகமூடி சமூகமிது
கூறிடவே கூச்சபட்டு
வாழ்வழித்த தமிழர் பலர்
இது போல இனி வேண்டாம்
அராய்ந்து பார்த்திடுவோம்
அனைத்தையுமே பேசிடுவோம்
அன்போடு இன்பமென
உனக்கென உள்ளவரோடு
உன்னதமாய் வாழ்ந்திடவே
உரிமையாய் பேசிடுவோம்
உண்மையாய் வாழ்ந்திடுவோம்!!!
கடவுளுக்கு எதுக்காக புரியாத மொழி?? இடைத்தரகர்கள்??

இப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கையே சுத்தகமாக இல்லாமல் போய் விட்டது. அதுக்காக என்னை போல எல்லோரும் நம்பிக்கை இல்லாமல் இருக்கவேண்டும் என்று நான் நினைக்க முடியாது திணிக்கவும் முடியாது அது அவரவர் விருப்பம். அப்படி விவாதித்து எந்த பயனோ, முடிவோ கிடைக்க போவதில்லை.கிடைக்கவும் இல்லை.இது இன்று நேற்று ஆரம்பித்த பிரச்சனை அல்ல பல காலமாக நூற்றாண்டாக நடக்கின்ற வாதம் இதுவரை முடியவில்லை, முடியபோவதும் இல்லை.
நான் உங்கள் வழிக்கே வருகிறேன் உங்கள் பார்வையிலேயே சிறிது சிந்திக்கலாம்...
கடவுள் நம்பிக்கை பாமர மக்களுக்கு பல சந்தர்ப்பத்தில் உதவத்தான் செய்கிறது மனோவியல் ரீதியில் அதன் காரணங்கள் உண்மையாகவே இருக்கிறது. அதுக்கு காரணம் அவர்களது நம்பிக்கை. ஒரு தவறை செய்தவன் அதை உணரும் போது அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து வெளிவராமல் இருந்தால் அவனை அந்த குற்ற உணர்வே அழித்து விடும். ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவன் கடவுளிடம் மன்னிப்பு கேட்டு அந்த பாரத்தை இறக்கி வைக்கிறான். இது போலவே அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கும் ஒருவன் இந்த நம்பிக்கையில் தனது தோல்வியை மறந்து மீண்டும் இறைவனை வணங்கி இம்முறை வெற்றி அடையும் என்ற நம்பிக்கையில் மீண்டும் முயற்சி செய்கிறான் தாழ்வு மனப்பாங்கினை சுமக்காமல். வெற்றியும் பெறுகிறான்.பேய் பிடித்து விட்டது என்ற நம்பிக்கையை இந்த கடவுள் நம்பிக்கையால் போக்க,இப்படியாக சில...பாமரர்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது.
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை ஒன்று இருந்து அது உங்களுக்கு எந்த பாதிப்பையும் கொடுக்காமல் சந்தோசத்தை கொடுக்குமாக இருந்தால் எதுக்காக அதை தவறென்று சொல்ல போகிறோம்? அது வேண்டாம் என்று சொல்ல போகிறோம்? இங்கு இந்துமதம் என்ற போர்வையில் எப்படியான இடங்களில் பாமாரர்கள் ஏமாற்ற படுகிறார்கள் தங்கள் நம்பிக்கையை தளர விடுகிறார்கள் என்று பார்ப்போம்.
கடவுள் எங்கும் இருப்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொல்கிறார்கள் அப்படி பட்ட இறைவனை எதுக்காக கோவிலுக்கு சென்று பணம் கொடுத்து புரியாத பாசையில் சொல்லி வணங்க வேண்டும்?
அதுக்கும் விளக்கம் சொல்கிறார்கள் பசுவின் உடலில் இரத்தம் எங்கு இருந்தாலும் இரத்தத்தில் இருந்து வரும் பால் காம்பில் மட்டும் தானே கிடைக்கிறது அதுபோலவே கோவில் என்று சொல்கிறிர்கள். அப்படியானால் எதுக்கு புரியாத மொழியில் அர்ச்சனை? கதிர்காம கந்தன் கோவிலில் வாய் கட்டி செய்யும் பூசை முறையில் கடவுள் ஓடி போய் விட்டரா? இல்லையே அருள் மிகுந்த கொவிலாக இன்னும் வழிபட்டுகொண்டுதானே இருக்கிறார்கள். அப்படியானால் மந்திரம் என்பது இறை வழிபாட்டுக்கு தடை இல்லை.
அடுத்து கடவுள் குடி கொள்ள சுத்தமான ஒரு இடம் வேண்டும் என்பதால் கோவிலை சொல்கிறிர்கள்.அதே சுத்தமான கடவுள் விரும்பும் இடமாக உங்கள் வீட்டிலேயே ஒரு அறையை வையுங்கள் கடவுளை அங்கு தேடுங்கள் அதன் பின் எதுக்கு கோவில்? பணம் கொடுத்து அர்ச்சனை? தெரியாத மொழி ? உங்களுக்கு நம்பிக்கை இல்லையா உங்கள் வீட்டில் ஒரு இடம் அமைத்து பக்தியோடு வழிபட்டால் இறைவன் அங்கு குடிகொள்வார் என்று.அப்படியும் வணங்கி விட்டு கோவிலிலும் எதுக்கு சென்று வணங்க வேண்டும்?வேறு வேறு கடவுளா? இல்லை கோவிலில் அருள் அதிகம் கிடைக்குமா?
பசுவின் காம்பில் இருந்து பால் கிடைப்பது போல உங்கள் உடலில் மனதை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் அங்கு இறைவனை குடி அமர வையுங்கள் எந்த அசுத்தங்களையும் உங்கள் மனதை நெருங்காமல் பார்த்து கொள்ளுங்கள் அந்த அருள் பொழியும் இடமாக உங்கள் மனது விளங்கும். அப்படி யாரும் செய்வதில்லை ஏன் என்றால் நம்பிக்கை இல்லை எங்களால் சுத்தமாக இருக்க முடியாது அதனால் அது சாத்தியம் இல்லை என்ற நம்பிக்கை அதனால் வீட்டு பூஜை அறையில் தேடுவது அதை சுத்தமாக வைத்து வழி படுவது அதிலும் நம்பிக்கை இல்லாமை மேலும் கோவிலுக்கு இழுத்து செல்கிறது உண்மையில் நம்பிக்கை இருகிறதா உங்களுக்கு? நாயன் மார்கள் எல்லோரும் கோவில் சென்று கடவுளை காணவில்லை அவர்கள் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும்.
முதலில் உங்கள் நம்பிக்கையை வளர்த்துகொள்ளுங்கள் இன்று பலர் கோவில்களில் நம்பிக்கை அற்றவர்களாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் செல்ல தொடக்கி விட்டார்கள் அதுக்கு பெரும் தன்மையாக ஒரு விளக்கம் சொல்லுவார்கள் எல்லா மதமும் ஒன்றுதான் என்று. காரணம் அதுவல்ல கடாவுளை வெளியில் தேடுவதே.
இப்படியான நம்பிக்கை இல்லாத பக்தர்களே இன்று அதிகம் பணத்தினால் கடவுளை காணலாம் என எண்ணுகிறார்கள் பெரிய யாகம் நடத்துகிறார்கள் பல ஆயிரம் செலவழித்து பூஜைகள் செய்கிறார்கள் எதுவும் திருப்தி இல்லை காரணம் நம்பிக்கை இல்லை. நாடு நாடாக திருத்தலங்களை தரிசிக்கிறார்கள் இவர்கள் தான் எல்லாவற்றாலும் பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்து சாமியார், மந்திர வாதிகளை நாடுகிறவர்கள். இவர்கள் தான் மூடநம்பிக்கையை விதைப்பவர்கள்.
கடவுள் என்ற ஒருவன் இருந்தால் உங்கள் மனது சுத்தமாக இருந்தால் அங்கு நிச்சயம் இறைவன் குடிகொள்வான் இதுக்கு மாற்று கருத்து உண்டா?
உங்களால் முடியவில்லையா எங்கு தேடினாலும் உங்களுக்கு கிடைக்க போவதில்லை. உங்கள் மனதை அழுக்காக வைத்து கொண்டு எத்தனை முறை நீராடினாலும், புதிய உடை அணிந்தாலும் எத்தனை கோவில்கள் சென்றாலும் எந்த பயனும் இல்லை.
கடவுளை உங்களுக்குள் தேடுங்கள் இல்லையா? வர வையுங்கள் அதுக்கான ஆயத்தங்களை செய்யுங்கள்.
அதை விடுத்து உங்களை பலர் அருள் வாங்கி தருவதாக தரகராக இருந்து ஏமாற்றுவதை மூட நம்பிக்கைக்கு அடிமை ஆவதால் தான் நாங்கள் விவாதிக்க வேண்டி இருக்கிறது.
நம்பிக்கை, மூடநம்பிக்கையாகாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்களை நம்புங்கள் எந்த தரகர்களும் தேவை இல்லை.
கடவுள் என்று ஒன்று இருந்து உங்கள் மனதை சுத்தமாக வைத்து இருந்தால் அங்கு கடவுள் குடிகொள்ள மாட்டாரா? இல்லை என்று உங்களால் மறுக்க முடியுமா?அப்படியானால் எதுக்கு வெளியில் தேடுகிறிர்கள்?
கடவுள் நம்பிக்கை இருந்துவிட்டு போகட்டும் அது அவரவர் மனது சம்பந்தபட்ட விருப்பம். ஆனால் அந்த நம்பிக்கையை வைத்து மூட நம்பிக்கைகளை வளர்ப்பதோ, ஏழைகள்+ பாமரர்கள் சுரண்ட படுவதோ ஏற்றுகொள்ள முடியாதது .....
நீலப்படம் (Blue Film )........ (18+)
நேற்று மாலை எனது நண்பன் ஒருவனை பல வருடங்களுக்கு பின் திடீரென வீதியில் எதிர் திசையில் சந்திக்க நேர்ந்தது. பல வருடமாகியதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்தது ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் இனம்கண்டுகொண்டோம் அவனை பார்த்ததும் எனது மனது ஒரு பெயரை முணுமுணுத்தது அது வேறு ஒன்றும் இல்லை அவனுடைய பட்ட பெயர்தான் " உடுப்பு ic " , உடனே உதட்டில் ஒரு நக்கல் சிரிப்பு வந்து ஒட்டிகொண்டது அவனும் அருகில் வந்தான் பட்ட பெயர் கொண்டு அவனை அழைத்தேன் "நீ இன்னும் இதை மறக்கவில்லையா" என்றான்.எப்படி மறப்பது சொல்லுங்கள் இவன் செய்த வேலை மறக்க கூடியதா? சொல்லுங்கள்!!!!
சில வருடங்களுக்கு முன்.........
எனது நண்பனின் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு பெண்ணின் திருமணம் அதுக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தது நாளை திருமணம் அதனால் பலகாரங்கள் செய்வதில், திருமண வேலைகளுக்காக அக்கம் பக்கத்த்தில் உள்ளவர்கள் எல்லோரும் பக்கத்து வீட்டில் இருந்தார்கள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்த நினைத்து நண்பனின் வீட்டில் நான்கு நண்பர்கள் சேர்ந்து ஒரு மாதிரியான படம் பார்த்துகொண்டிருந்திருக்கிறார்கள் ஆனால் அங்குதான் அவர்களுக்கு ஆப்பு காத்திருந்தது நண்பனின் பாட்டிக்கு கண் பார்வை மிகவும் குறைவு ஏன் இல்லை என்றே சொல்லலாம் அப்படி இருந்த பாட்டிக்கு அன்று எப்படி கண் தெரிந்ததோ நண்பர்களை பார்த்து கேட்டிருக்கிறார் இதென்ன தொலைகாட்சி பெட்டியில் இருப்பவர்களுக்கு உடுப்பு ஒன்றும் இல்லை என்று, அறிவு பூர்வமான எனது நண்பன் பாட்டிக்கு சொல்லி இருக்கிறான் பாட்டி TV ல உடுப்பு IC அடிபட்டு போச்சு அதுதான் அப்படி தெரிகிறது என்று அது மட்டும் இல்லாமல் பாட்டிக்கு விளக்கம் சொல்லி இருக்கிறான் Sound IC பழுதடைந்தால் சத்தம் வாராதது போல , கலர் IC பழுதடைந்தால் கலர் இல்லாமல் போவது போல , உடுப்பு IC பழுதடைந்தால் உடுப்பு வராது என்று. பாட்டியை சமாளித்தது வீர தீர பராகிரம செயலாக நினைத்துகொண்டிருக்கையில் ...
மறுநாள் திருமணம் முடிந்து. அப்போதெல்லாம் யாழ்பாணத்தில் திருமண வீட்டில் இரவில் திரை படம் போடுவது வழமை அதுக்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது அதற்கு நண்பனின் தொலைக்காட்சி பெட்டிதான் கொண்டு சென்றனர் இப்போது திருமண வீட்டில் தனது வீட்டு தொலைக்காட்சி பெட்டி இருப்பதை தெரிந்துகொண்ட பாட்டி முன்னு வந்து பலர் முன்னிலையில் தொலைக்காட்சி பெட்டிக்கு குறுக்காக நின்று கொண்டு இந்த தொலைக்காட்சி பெட்டிக்கு உடுப்பு IC வேலை செய்யவில்லை நேற்றுத்தான் தம்பியும் நண்பர்களும் பார்க்கும் போது உடுப்பில்லாமல் எல்லோரும் வந்தார்கள் தம்பி எங்கே இருகிறாய் இவர்களுக்கு சொல்லு என்றார் என் நண்பனை பார்த்து....
அப்போது எனது நண்பனின் முகத்தை என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலை இன்றுவரை எனக்கு இருக்கத்தான் செய்கிறது......
நண்பனின் மானம் பலர் மத்தியில் போனது மட்டுமில்லாமல், அன்றில் இருந்து நண்பனுக்கு உடுப்பு IC என்ற பெயர் வழக்கில் வந்துவிட்டது...
இத்தனை வருடம் கழித்து நண்பனை காணும் போதும் எனக்கு இந்த பெயர்தான் முதலில் வந்து விழுகிறது..
பார்த்தீர்களா? பாட்டிக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு தானே அவரை ஏமாற்றலாம் என்று எண்ணியதன் முடிவு ...........
எங்கள் தப்புகளை அடுத்தவர்களின் அறியாமையின் அதிக நாட்கள் மூடி மறைக்க முடியாது அந்த அறியாமையே அதை வெளிகொண்டுவந்துவிடும்.
இன்று எல்லா துறைகளும், அரசியல், ஆன்மீகம் , வியாபாரம் எல்லாமே பாமரர்களை ஏமாற்றுவதாகவே உள்ளது...........
இவை என்று மாறுமோ?
மீள் பதிவு...
தாயா இவள் பேய்...!!!
கூர்ப்படைந்த குரங்கிவள்
மரபணுவில் மனிதனிவள்
மனிதத்தில் அரக்கியிவள்
உடையணிந்த ஊர்வசி
உள்ளத்தில் ராட்சசி
குரங்கிடம் கற்கவேண்டும்
தாயென்றால் யாரென்று
தாய்மையில் பெண் பேரழகு
தாயிவளோ பெண்மைக்கு பேரிழுக்கு
அம்மா ஆறறிவு இருந்தென்ன
குற்றுயிராய் குழந்தை தொங்க
உன்போல கொடூர தாய்க்கு
மனிதனாய் பிறப்பதைவிட
இக்குரங்கிற்கு குட்டியாய்
பிறந்திருந்தால் பூலோகத்தில்
பேரின்பம் அடைந்திருப்பான்!!!
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans
கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.
கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.இது சாத்தியமில்லையா? ஏன் சாத்தியமில்லை ???????? சாத்தியமாம் விஞ்ஞானம் சொல்கிறது.
இப்படியான மனிதனை உருவாக்கினால் பிறக்கும் குழந்தையின் செல்லின் வயது எந்த மனிதனின் (ஆணோ,பெண்ணோ ) செல்லை கருமுட்டையோடு சேர்த்தார்களோ அந்த செல்லின் வயதை உடையதாகவே பிறக்கும் குழந்தையின் செல் அதே முதிர்ச்சியில் இருக்கும் எனவே அது அறிவில்,அனுபவத்தில்,பாலியல் தன்மையில் செல்லை எடுத்த நபரினை ஒத்ததாகவே குழந்தை பருவத்திலேயே இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படியானால் குழந்தை பிறந்ததுமே பேசுமோ???
நான் பலமுறை நினைத்ததுண்டு இப்போது இருக்கும் அறிவு சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இருந்திருந்தால் என்னென்ன நடந்திருக்கும் என் வாழ்க்கை எப்படி மாறி இருக்கும் தவறான முடிவுகள் தவிர்க்கபட்டிருக்கும் என பல நேரங்களில் நினைத்திருக்கிறேன். அது இன்று சாத்தியமாகி இருக்கிறது எனது செல்லில் இருந்து உருவாகும் குழந்தை அச்சு அசல் என்னை போலவே என் அறிவுடன் உருவத்திலும் பிறக்கும் என்றால் அதிசயம்.
ஒரு ஆணினதும் பெண்ணினதும் உறவின் போது இருவரினதும் மரபணுக்களோடு சேர்ந்த உயிரணுவும் கருமுட்டையும் சேர்ந்து இயற்கையாக உருவாகும் புதிய கலவை மரபணுகொண்டகரு மூன்றே மாதத்தில் ஒரு வடிவத்துக்கு வந்துவிடும் அந்த மூன்றே மாத கருக்குழந்தையின் மரபணு ஒன்றை எடுத்து அந்த குழந்தைக்கு இன்னொரு குழந்தையை உருவாக்கிவிடலாம் இப்போது மூன்றே மாத கருகுழந்தை அப்பாவாகிவிடும். ஒருவேளை கருவில் இருக்கும் குழந்தைக்கு எதாவது ஆபத்து வந்துவிட்டாலும் அந்த மரபணுவை முதலிலே எடுத்து வைத்துகொண்டால் அதே குழந்தையை உருவாக்கிவிடலாம்.
இப்ப சொல்லுங்கள் கரு உருவாக கருமுட்டையும் மரபணுவும் போதுமென்றால் கருவில் இருக்கும் மூன்று மாத கருவின்(பெண்ணாக இருந்தாலும் பிரச்சனை இல்லை)) செல்லை எடுத்து இன்னொரு மரபணு நீக்க பட்ட கருமுட்டையோடு சேர்த்து கருத்தரிக்க செய்தால் கருவில் இருக்கும் மூன்று மாத பெண் சிசு அப்பாவாகாதா???????
இந்த குளோனிங் முறை கண்டுபிடித்ததில் இருந்து மதங்கள் எல்லாம் இந்த முறை தங்கள் மதத்தில் இருப்பதாக அலட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டது.
இந்த மாற்றங்கள் மனிதனை எங்கு கொண்டுசென்று விடும் என்பது யாருக்கும் தெரியாது..........
விஞ்ஞானத்தால் மனித வாழ்வை முன்னேற்றுகிறதா? பசித்த வயிறுகள் பல இருக்க மனிதநேயமற்ற கொடிய கொலைகள் தடுக்கபடாமலிருக்க வளர்ச்சிஎன்ற பெயரில் இவை எதை சாதிக்க போகின்றன??????????
காதலின் குழந்தை கல்லறை...!!!
ஏறி வந்த வாழ்க்கை படிகட்டுகளில்
ரசித்து புரிந்தவை சில
பிடிக்காமல் விலகி வந்தவை சில
புரியாமல் கடந்து வந்தவை பல
ஒரு புதிர்-விடை தேடி
ஓடி முடிவதற்குள்
அடுத்தடுத்த கேள்விகள்
வாழ்கையின் அர்தத்தை
சிந்திக்க நேரமற்று
ஓட்டம் மட்டும் முடிவாக
இதயவோட்டம் நிக்கும்வரை...!!!
ஆயிரம் ஆசைகள்
வந்து போயின
அதில் அடைந்தது என்ன
இழந்தது என்ன
அர்த்தமற்ற சிந்தனை மட்டும்தான்
நிரந்தரமாக ஆரம்பித்த இடத்திலேயே
விடைகள் மட்டும் சூன்யமாக ...!!!
கடந்து வந்த காலத்தில்
சூழ்ந்துகொண்ட பிரச்சனைகளில்
ஓடி ஒளிந்ததனால்
கிடைதவையெல்லாம் அனுபவம்
என்ற வீராப்பில்
உன் வயது என் அனுபவம் என்று
அடுத்தவர்களிடம் வாய்சுனாமி
அடித்தவரெல்லாம்
வாழ்க்கையை முகம் கொடுக்கமுடியாமல்
மூச்சு முட்டி மூழ்கி இறந்தவர்களே
பிணங்கள் மட்டும் பேசிக்கொண்டு திரிகிறது...!!!
வயதல்ல அனுபவம்
முன்னின்று முகம் கொடுத்து
முயற்சி செய்ததில்
கிடைத்த தோல்விகள்-அறிவுகள்
அதன்பால் கொண்ட
வெற்றிகள் தான் அனுபவம் ...!!!
நெற்றிகாசை எதிர்பார்த்து
எரியாமல் காத்திருக்கும் பிணம் வரை
பணத்தின் மேல் கொண்ட மோகம் தீருவதில்லை...!!!
மனங்களை நோகடித்தேனும்
பணங்களை அடையலாம் தவறில்லை
பணங்களை இழந்து மனங்களை ஜெயிப்பதில்
உடன்பாடில்லா புதுமை விதிகள்
மனிதத்தை வளர்ப்பதற்காக என்று
நமக்குள் சொல்லிகொள்கிறோம் ...!!!
பருவத்தில் வரும் காதல் போல்
ஈர்பில் வருவது இவையெல்லாம்
உண்மை காதல் மலர்ந்து
அவர்கள் குழந்தை பிரசவிக்கும்வரை
உண்மைபோல் தோன்றும் இவையனைத்தும்
பொய்யாக்கும் பிறந்த குழந்தை...!!!
எதுதான் உண்மை காதல்
மண்ணுக்கு எங்கள் மேல் இருக்கும் காதல்
அவர்கள் குழந்தைதான் எது
கல்லறை.
-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans
காதலன்,காதலி மனதில் இடம் பிடிப்பதெப்படி.
மனம் பழகிபோனால் குணம்.
எங்களை போல பசங்களை பார்த்த உடனே பிடிக்காது பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்........










.jpg)











.jpg)





