கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

என் வாழ்கையை என்னை வாழவிடு.

உன் விவேகத்தை புகுத்தாதே என் வேகத்தை கூட்டவிடு மதங்களை திணிக்காதே மனிதத்தை உணர விடு கலாச்சாரத்தை காக்க சொல்லாதே இளமையை உணரவிடு

ஒரு மிருகம் உயிருடன் இருக்கும்போது அதன் இறைச்சியை உண்ணும் மனிதர்கள் (காணொளி)

மாமிச பிரியர்களே, சைவ சமய அன்பர்களே,ஐயர்மார்களே உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி உயிரே கொல்லாமல் அந்தந்த மிருகங்களின் இறைச்சிகளை உண்ணும் பாக்கியம் இன்றைய விஞ்ஞானத்தால் சாத்தியமாகி இருக்கிறது.

TENGLISH KISS கொடுத்து குழந்தை பாக்கியம் (KISS சாமியார்)

தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார்.

யார் துரோகி? ஈழமும் தமிழர்களும். ...!!!

மறுவாழ்வு கிடைத்துவந்த போராளிகள் வாழ்க்கை வீதியில் நிக்குது எப்படி இவர்கள் தப்பி வந்தனர் என எட்டப்பன் பட்டம் கட்டுது கூடவே பல கட்டுகதை கட்டுது மொத்தத்தில் இவர்களை ஒதுக்கியே வைக்குது அன்றைய போராளிகள் இன்றைய துரோகிகள் என்கிறது

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

இயற்கையிடம் கற்க மறந்ததை!!!





ஒளி நோக்கி உயர்ந்திடும் மரமே 
உன் வளைவுகள்உரைக்கிறது 
உணவுக்கான உன் உழைப்பை 
உன்னை பார்த்தேனும் நான் 
உணரவில்லையே 
உழைத்து உயர்ந்திடும் உண்மையை
பட்டு கெட்டு அறிந்தபின்
பார்த்து வியக்கிறேன்
இயற்கையிடம் கற்க
மறந்ததை!!!

-புலோலியூர் கரன்-

என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

இதய நதியினிலே


இதய நதியினிலே உதித்த 

சில இனிய செங்கமலங்களை
கற்பனையில் வடித்ததுண்டு 
பதின்ம பருவ மயக்கங்களில் 
படிதாண்டி ரசித்ததுமுண்டு 
ஆயிரம் வண்ண இதழ் மலர்கள் 
உன்னருகில் வலை விரித்தபோதும்
உன் இதழசைவில் என் உயிர் துடிக்கிறது
உன்னால்தான் இன்னும் உலகம் இனிக்கிறது



-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

நதிகளுக்கு இவள் கடலோ!



தங்க வாழை தண்டெடுத்து 

பிரம்மன் வடித்த மெய்யோ!
பூக்களெல்லாம் நாணமுற 
தரணி வந்த செம்மலரோ!
இழை உருக்கு ஒளிதெறிக்க 
உடையணிந்து உற்றவரை 
உருக்குலைக்க உதித்தவளோ!
மனிதரெலாம் செழிப்புற
பாரெங்கும் ஓடிவந்து சங்கமிக்க
நதிகளுக்கு இவள் கடலோ!
மரங்களெல்லாம் பசுமைகொள்ள
இவள் இளமைதான் இன்ப வூற்றோ!
காளையர் மனதில் பருவமெழுதிட
கற்பனையில் வடித்து வைக்கும்
பதின்ம கனவுக் காதலியோ!
பாமரன் நானும் கவி எழுதிட
என் கண்கவர வந்த கவிக்கருவோ!!!

-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans

வழிமேல் விழிவைத்து..



வெள்ளி மலர் சிந்திடும் 

நிலவொளித் தேனினிலே 
பொண் ஒளி படரவிடும்
பொழிந்த பருவங்கொண்ட 
பரவச மெய்யுடையாள் 
தேன்சுவைத்த வேளைகளில்
தென்னவன் ஸ்பரிசங்களை
செவ்வாய் உமிழ் சுரக்க
செறிந்திடும் நதியினிலே நாணம்
விரல்கொண்டு ஸ்வரங்கள் மீட்ட
கள்ளிடையாள் கரம் பிடிக்க
உதயன் உதிப்பதற்குள்
திடந்தோளான் வரவுக்காய்
ஏக்கமுற லயித்திருந்தாள் !!!


-புலோலியூர் கரன்-
என் பக்கத்தில் இணைய....
http://www.facebook.com/sabaharans