கருவில் இருக்கும் 3 மாத பெண் குழந்தை அப்பாவாகியது.

கருவில் இருக்கும் குழந்தை கூட அப்பாவாகலாம் , குழந்தை உருவாக ஆண்களே இனி தேவையில்லை, உங்களுக்கு விரும்பியவரை குழந்தையாக பெற்றுகொள்ளலாம், நீங்கள் கருத்தரிக்க ஆண்களோ, உடலுறவோ தேவையில்லை.........

சிறு துரும்பு வீழ்ந்தாலும் கலங்கி தவிக்கும் என் மனக்கிணறு இன்று பல எரிமலைகளையும், பாரிய அகழிகளையும் இன்னும் பற்பல தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் சமுத்திரம் போல் மாறியது கடந்து வந்த காலம் கற்று கொடுத்த பாடமென்றே நினைக்க தோன்றுகிறது .....

சோதனைகளும் வேதனைகளும் எல்லோருக்கும் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது ஒருவன் அதையும் தாண்டி மகிழ்வாக இருக்கிறான் என்றால் அதை ஏற்றுகொள்ளும் பக்குவத்தை வளர்த்துகொண்டு விட்டான் என்பதே தவிர அவனுக்கு துன்பங்கள் சோதனைகள் வேதனைகள் இல்லாமல் போய்விட்டதென்பதல்ல .....

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்.உனக்கான வாழ்கையை அடுத்தவர்களுக்காக இழக்காதே. உனக்காக வாழ கற்றுகொள்..
-புலோலியூர் கரன்-

Followers

இத்தனை அழகையும் மொத்தமாய் ஓரிடத்தில் !!!

மழைமேகம் நிலவதன்மேல் தவழ்ந்து விளையாடுவதுபோல் உன் நிலா முகத்தில் கார்குழல் வீழ்கிறதே உன் தங்க நிற அங்கத்தில் ஒட்டிய வைர மூக்குத்தியும் மங்கித்தான் போகிறதுஉன் முகத்தின் அழகு கண்டுவானவில்லும் வயிறெரிந்துகருகித்தான் போனதுவேகருகிய வானவில்லும்உன் புருவம் ஆனதெப்போகாந்தம் கொண்டு செய்தகருநிலா இரு விழியும்காளையர் மனங்களைகவர்வதில் மாயமில்லைஉதட்டோரம் குவியும்உன் புன்சிரிப்பில்சிதறாமல் ஓரிதயம்இருந்துவிட்டால் அதுஇப்பாரினிலே அதிசயமேதூக்கிய...

இணையத்தில் கவியாகிவிட்டாய் ...!

கிளையோடு விளையாடி இலையோடு உறவாடி கனியோடு பசியாறி மனதோடு இதமாகி கணணியோடு  காட்சியாகி இணையத்தில் கவியாகிவிட்டாய் .....

ஐ லவ் யூ அப்பா

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை.வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை...

இலக்கை நிர்ணயி, திட்டமிடு ,உழை ,வெற்றி பெறு...! !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது.அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால்,அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது.வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்;வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும்.இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது.இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்...

தட்டிவிடும் சாக்கில் என்கைகள் அவளை தொட்டுவிட ...!

ஈர காற்று மெல்ல வீசி வந்து அவள் இதழோடு உரசி செல்ல காற்று பட்டு மூடித் திறந்த கண்கள் என்னை அருகில் சொக்கி இழுக்க பொறாமை கொண்ட மணல்கள் கண்ணில் புகுந்து கலகம் செய்ய புத்தி கொண்ட சில மணல்கள்அவள் அங்கம் ஒட்டி கொள்ளஅதை தட்டிவிடும் சாக்கில்என்கைகள் அவளை தொட்டுவிடவெட்கி தலை கவிழ்ந்து அவளும்மெல்ல என் மடியில் ஒட்டிக்கொள்ளகைகளை மெல்ல மாலைகளாக்கிதன்னோடு இறுக்கிக்கொள்ளபோக வழியன்றி வீசி வந்த தென்றலும்வெட்கி சென்று கடலிடம் முறையிடநியாயம்...

கருப்பை சிறையில் பத்து மாசம்...!

என் உயிர் வருத்தி  உன் உயிர் கொடுக்க  கருவறையில் சில மாசம்  உன்னை நான் சுமந்தேன்  என்னை உயிரோடு பிணமாக்கி  எதற்கிந்த கல்லறை இல்லத்தில்அனாதையாய் விட்டு சென்றாய்உன்னைபத்து மாதம் என் கருப்பையில்சிறை வைத்ததாக நினைத்துஎனக்குஇங்கு தினமும் மரண தண்டனையா...!...

மார்பழகு கெட்டுவிடுமென

மார்பழகு கெட்டுவிடுமென மகனுக்கு மாப்பால் கொடுக்கும் மங்கையர் உலகினில் இவனுக்கு தாயிந்த பசு இனி வரும் காலம்தனில் முதியோர் இல்லங்கள் அடிகொன்று வந்தாலும் ஆச்சர்யமில்லை.........

English Kiss கொடுத்து குழந்தை பாக்கியம் (Kiss சாமியார்)

கோவை மாதம்பட்டி குப்பனூரில் அற்புத சாமியார் அவதரித்திருக்கிறார் தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார். இந்துமதம் போல எங்காவது இப்படி அருள் வழங்க யாரும் இருக்கார்களா? ...

உயரத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி எறியும் மூட நம்பிக்கை (காணொளி)

ஐம்பதடி உயரத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி எறிந்து கீழே சிலர் நின்று பிடிக்கிறார்கள் இது குழந்தைக்கு நல்லதாம் எப்படி எப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள்........... ...

ரஜினி நல்ல நடிகனா? தலைவனா?

தாய் மண்ணில் கோடிகளில்  தொழிற்சாலைகள்  உன் மகளுக்கு கோடிகளில்  சீதனம்  வங்கியில் மில்லியன் கோடிகள்  பணமாக  இத்தனை இருந்தும் இறப்பர் செருப்பில்இந்தியர் மனதில் இடம் பிடிக்கும்சூட்சுமம் எப்படி அறிந்தாய்நிஜமாகவே நீ நடிகன்டாஇருப்பதை வாரி வழங்கிவிட்டுஇல்லாமல் இருப்பதை போலஇங்கு பெருமை பேசிக்கொள்ளஇதுபோன்ற புத்தகங்கள் இருக்கும்வரைஉன்னை தலைவன் என போற்றும்உருப்படாத ரசிகர்கள் இருக்கும்வரைநீதான் அடுத்த முதலமைச்சர்கல்விக்கண் திறந்த...

மெல்லிடையோ இது கள்ளிடையோ!

உன்னில் நனைகிறது என் விழிகள் காந்தபார்வையில் இரும்பாகியே!மதிவதனி உன் வதனம்கண்டு மறந்ததென் மதியும் முகமும்!கன்னங்கள் சிந்தும் போதையில்மதுக்கிண்ணங்கள் தோற்றதே!குவியும் உன் செவ்வுதட்டில்சிதறித்தான் போகிறேனே நான்!திமிரும் உன் பருவங்கள் கண்டுஉருகுது என் இளமையும் மென்று!மெல்லிடையோ இது கள்ளிடையோபோதையில் ஆடி முறிந்து முளைக்குது!நீ கன்னத்தில் வைத்த கையழகில்தான்என் எண்ணத்தில் கவியும் வந்து வீழ்ந்ததோ!...

உலகிற்கு அம்மா உழவன் என்பேன் !

பசி இல்லாததுபோல பாசாங்கு செய்வாள் பிள்ளையின் பசி போக்க பட்டினியாய் கிடப்பாள் கடவுள் இல்லை என்று எப்போதும் நான் சொன்னதில்லை அம்மா உன் கருணை கண்டதால் தானும் தன் குடும்பமும் வறுமையில் தவிக்க பூமியை செழுமையாக்கி உலகத்தவர்கள் யாவரும் பசியாற உழைக்கும் உழவனும் தாயும் ஒன்றே எனக்கு இறைவன் அம்மா என்றால் உலகிற்கு அம்மா உழவன் என்பேன் உழவனே உன் தியாகம் உணர்ந்ததால் உள்ளத்தில் இன்னமும் நன்றி உள்ளதால்!!! -புலோலியூர் கரன்- https://www.facebook.com/sabah...

சூரியன் மேல் பழி போடாத குந்திகள்

நாகரீகம் இங்கே கூட கூட உடைகள் அங்கே குறைகின்றன புதிய உடையை கிழித்து அணியும் புதுமை புரட்சியும் நடக்கிறதங்கே இன்றைய கண்ணகிகள் போதைக்காக கற்பிழக்கும் கண்ணன் அழகிகளிவர்கள் கலியுக கர்ணன்களை உருவாக்கும்செல்வந்த சுகபோக வாரிசிவர்கள்சூரியன் மேல் பழி போடாத குந்திகள்சுகம் தேடி அலையும் இந்திரலோகமிதுமாற்ற உடையின்றி ஒருசமூகமிங்கேமழைக்கு ஒதுங்க இடமின்றி நனையுதுகிழிந்த உடையை தைத்து தைத்து உடுத்திகற்பு காக்கும் இவர்கள் தீண்டத்தகாதவரிங்கேசுருங்கிய...

பூசாரி!!!

கடவுளின் தூதுவன் நான் சாதியில் உயர்ந்தவன் என் அங்கங்கள் எல்லாம் அருள் பொழியும் தங்கங்கள்என்னுடல் பட்டால் அடையலாம்பூலோகத்தின் பிறவிப்பயன்..!!!இவர் பாதத்தால் மிதிக்கும் போதே இத்தனை அருள் என்றால் இவர்...........-புலோலியூர் கரன்-https://www.facebook.com/sabahara...

நடமாடும் பிணமாக!!!

இறந்தது நீதான் எடுத்து சென்றதோ  என் உயிரைத்தான் கல்லறையில் நீயோ அமைதியான தூக்கத்தில் அதன்மேல் நானோ நடமாடும் பிணமாக!!! -புலோலியூர் கரன்-...

அரை நிர்வாணப் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட முஸ்லீம் பெண்ணுக்காக அரை நிர்வாண போராட்டம் (18+)

முஸ்லீம் பெண்ணுக்கு ஆதரவாக அரை நிர்வாண போராட்டம் துனிசியா நாட்டில் வாழும் அமீனா என்ற 19 வயது பருவப் பெண், தனது அரை நிர்வாணப் படத்தை தனது முகநூலில் வெளியிட்டார். "எனது உடல் எனக்குரியது, யாரையும் மகிமைப் படுத்துவதற்கு அல்ல." என்று அரபி மொழி வாசகங்களை தனது மார்பில் எழுதி வைத்திருந்தார். அந்தப் படம் வெளியானவுடன், நாலாபக்கமும் இருந்து மதவாதிகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அமீனாவை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று சில இஸ்லாமிய மதத் தலைவர்கள்...

நிலா முகத்தில் இரு பிறைநிலா பேரழகு

தங்கங்கள் தான் மின்னுமே ஏனோ பெண்ணே உன் அங்கங்கள் மேலிருப்பதால் மங்கித்தான் போகின்றன உன்மேல் வானவில்லுக்கு என்ன இத்தனை உரிமைசேலையாகி மானம் காக்கிறதேமானம் காப்பதாக சொல்லிஉன் சோலை தழுவியேஎன் கோவம் தூண்டுதேபூக்கள் பூத்து குலுங்கும்அழகிய நந்தவனத்தில்உன்னையன்றி எதையும்பார்க்க தோன்றவில்லையேஉன் நளினம் கண்டு மயங்கிமயிலும் நடனம் கற்க வந்ததோஉன்னசைவு கொண்டு அன்னமும்நடை பயின்று சென்றதோவண்ணத்து பூச்சியொன்றுதேன் குடிக்க வாடி நிக்குதேஉன்...

கடவுள் மலடாகட்டும்!!!

இறைவா! யாருமற்ற அனாதைகள் உன் குழந்தைகளாமே தவம் ஒன்று செய்கிறேன் நீயும் மலடாகி போக  வரம் ஒன்று தருவாயா!!! -புலோலியூர் கரன்-...

அவள் நினைவுகளில்....!!!

கவலையில் இருந்தேன்  கனவுகள் இல்லை அவள் நினைவுகளால் எனக்கு தூக்கங்கள் இல்லை  கண் மூடியும் விழித்திருந்தேன்  தையலவள் கூந்தலிடை  முகம்புதைத்த நினைவுகளில் கண் விழித்திருந்தும்  லயித்திருந்தேன் அவள்  சுவாசம் தடவிய ஸ்பரிச  பொழுதுகளை மீட்டியபடி...

என்னை வணங்க வாசலில் சிலர்!!!

என் கஷ்டத்தை தீர்க்க கோவில் நோக்கிய பயணத்தில் பூசாரியின் அர்சனை சீட்டுக்கள் பிச்சைகாரர்களில் தட்டுக்கள் கடவுளின் உண்டியல்கள் என்னை நோக்கியே இருக்கின்றனநான் கடவுளை வணங்கமுன்என்னை வணங்க வாசலில் சிலர்!!! -புலோலியூர் கரன்-என் பக்கத்தில் இணைய....http://www.facebook.com/sabahara...

15 பேரை உயிருடன் கொடூரமாக எரிக்கும் காணொளி

எச்சரிக்கை :இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நன்று.........கென்யா நாட்டின் மேற்குப்பகுதியில் "கீசி" இன மக்கள் வாழும் பிராந்தியத்தில் 15 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சுமார் 100 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீடுகளில் சோதனை நடத்தி இந்த 15 பேரையும் வெளியே இழுத்தெடுத்து. அவர்களை சூனியக்காரிகள் என குற்றம் சுமத்தி தெருவில் பலர் முன்னிலையில் உயிரோடு கொளுத்தியது. கென்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திகில்சம்பவம், அரசாங்கத்தை விரைந்து நடவடிக்கை எடுக்க தூண்டியது. கும்பல் வன்முறையில் ஈடுபட்ட சிலரை கைது செய்தது. கிறிஸ்தவ மதம் அதிகாரம்செலுத்திய மத்திய...

உமாதேவி உடலில் இத்தனை அழுக்கா...!!!

உலகை காக்கும் உமையவள் உடல்தனில் அத்தனை அழுக்கா? உருட்டி உருவம் செய்து உயிர் கொடுக்கும் அற்புத அறிவியல் கடவுளர் உலகினில் பார்வதி குளிக்க காவலர் ஏனோ?யாரிடமிருந்து காத்திட சொல்லிகுளித்திடும் இடமதில்உயிர் கொடுத்த உருவத்தினைவாசலின் காவல் வைத்தார்?அவனன்றி அணுவுமசையாதஅற்புத சக்திவான் சிவன் கூடதன் பிள்ளை இவனெனஅறிந்திடா மாயமென்னபிள்ளை"யார்" என கேட்டது சரிய...

ஒழுக்கமில்லை எனக்கு....

உதயனின் கள்ள காதலால் பூமியை பிரிந்தவள் நான் என்பிரிவால் வறண்டது பூமிகாதல் பயனத்தினிடையில் முகிலவன் மோகத்தால் அவள் அணைப்பில் சிலநேரம்உரசிடும் முகில்களின்உக்கிர மோதலில் சிந்தியஉதிரமாய் பார்தனில்வந்து மீண்டும் வீழ்ந்தேன்துள்ளி குதித்து மகிழ்கிறேன்மழைதுளியாக!!!அடுத்த பயணத்திற்காகநீர்த்துளியாக!...